
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அவரின் சகோதரி பிரியங்கா காந்தியும் ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் பனிப்பகுதியி்ல் ஸ்கூட்டர் ஓட்டி மகிழ்ந்தனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அவர்களின் நண்பர்கள், உறவினர்கள் ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் பகுதிக்கு கடந்த வாரம் ஓய்வுக்காகச் சென்றனர். அங்கு ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் பனிக்கட்டியில் ஓட்டப்படும் ஸ்கூட்டரில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
பிரியங்கா காந்தி ஸ்கூட்டரை ஓட்ட ராகுல் காந்தி பின் இருக்கையில் அமர்ந்து சென்றார். ராகுல் காந்தி ஸ்கூட்டர் ஓட்ட பிரியங்கா காந்தி பின் இருக்கையில் அமர்ந்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி வருகிறது.
101 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டு வைரலாகி வருகிறது.ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் பனிக்கட்டியில் ஓட்டப்படும் ஸ்கூட்டரை ஓட்டி மகிழ்ந்த காட்சி ட்வி்ட்டரில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பாரத் ஜோடோ யாத்திரைக்காக ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் வந்திருந்தார். கன்னியாகுமரியில் யாத்ராவைத் தொடங்கிய ராகுல் காந்தி காஷ்மீரில் முடித்தார். காஷ்மீரில் சில நாட்கள் ராகுல் காந்தி தங்கியிருந்தபோது, தனது சகோதரி பிரியங்கா காந்தி மீது பனிக்கட்டிகளை வீசி எறிந்து விளையாடினார். இந்த வீடியோ காட்சியும் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இப்போது இருவரும் பனிக்கட்டியில் ஸ்கூட்டர் ஓட்டி மகிழும் வீடியோ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் அதிகமாகப் பகிரப்பட்டு, லைக்குகளை குவித்து வருகிறது. இந்த வீடியோவை காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள் அதிகாகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.