எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்டா வடிவேலு காமெடியைப் போல் எனது நிலை மாறிவிட்டது... புதிய வீடியோவை ரிலீஸ் செய்த நித்யானந்தா..!

By vinoth kumarFirst Published Dec 18, 2019, 11:48 AM IST
Highlights

குஜராத் நீதிமன்றம், கர்நாடக நீதிமன்ற, வெளியுறவுத் துறை அமைச்சகம் என்று எத்தனை பேர் நித்தியானந்தாவைத் தேடினாலும், அவர் நிழல் இருக்கும் இடம் கூட இன்னும் இந்திய அரசு தரப்புக்குத் தெரியவில்லை. அரசு சார்பில், நித்தியானந்தா தலைமறைவாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டாலும், தினம் ஒரு வீடியோவை ரிலீஸ் செய்து அதிரடிகாட்டி வருகிறார். 

கிரி படத்தில் வரும் வடிவேல் காமெடியை போல் `எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்டா என்பதுபோல் எனது நிலை மாறிவிட்டது என நித்தியானந்தா கூறியுள்ளார். தற்போது முழு நேரமும் ஊடகங்கள் என்னை பற்றி தான் பேசி வருகின்றது. 

குஜராத் நீதிமன்றம், கர்நாடக நீதிமன்ற, வெளியுறவுத் துறை அமைச்சகம் என்று எத்தனை பேர் நித்தியானந்தாவைத் தேடினாலும், அவர் நிழல் இருக்கும் இடம் கூட இன்னும் இந்திய அரசு தரப்புக்குத் தெரியவில்லை. அரசு சார்பில், நித்தியானந்தா தலைமறைவாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டாலும், தினம் ஒரு வீடியோவை ரிலீஸ் செய்து அதிரடிகாட்டி வருகிறார். 

அதில், கைலாசா என்ற பெயரில் தனி நாடு அமைக்கப்போவதாக ஆரம்பித்த நித்யானந்தா காமெடி தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள். மீம்ஸ் போடும் மாம்ஸ்களா உங்கள் மீம்ஸ்களால் தான் கைலாசா பிரபலமானது என அதையும் தனக்கு சாதகமாக்கி பேசி வருகிறார் நித்யானந்தா. உலகில் எங்கோ இருந்தபடி நித்யானந்தா தினசரி உபதேசங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், வழக்கம் போல் நித்தியானந்தா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், முன்பெல்லாம் நாட்டில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால்தான் அதனை திசை திருப்ப தம்மை பற்றிய செய்திகள் உலாவும், ஆனால் தற்போது ஏதாவது பெரிய பிரச்சனை வரும்போது தவிர்த்து மற்ற நேரங்களியெல்லாம் முழுநேரமும் தம்மை பற்றித்தான் ஊடகங்கள் பேசிக்கொண்டிருக்கின்றன. எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் என்கிற வடிவேலு காமெடியைப் போல் எனது நிலை ஆகிவிட்டது. 

2003-ம் ஆண்டு முதல் நான் சந்திக்காத குற்றப்பிரிவுகளே இல்லை, தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலும் நான் நிரபராதி என்று நிரூபித்துள்ளேன். நான் செய்ய வேண்டிய என்னுடைய ஆன்மிக கடமையை தொடர்ந்து எவ்வளவு தடை வந்தாலும் செய்து கொண்டே இருக்கிறேன், இதனால் தமிழர்கள் என்னை ஆன்மிக ரீதியாக எப்போதோ தலைவர் என்று ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். கைலாசா தனி நாடு அமைக்கும் திட்டத்தால் எனக்கு அடிதான் விழும் என்று நினைத்தேன். ஆனால், அதற்கு ஆதரவு பெருகி வருகிறது. கடவுளின் அருளால் கைலாசாவை அமைப்பதை எனது திருப்பணியாக செய்தே தீருவேன். நேரம் வரும்போது இதுகுறித்து அறிவிப்பேன், என்று கூறியுள்ளார்.

click me!