
குஜராத் சுயேட்சை எம்எல்ஏவும் அறியப்படும் இளம் தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி அசாம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் பாஜகவுக்கு சவாலாக இருக்க கூடிய தலைவர்களில் ஒருவர் ஜிக்னேஷ் மேவானி. கடந்த 2017 குஜராத் சட்டமன்றத் தேர்தலை காங்கிரஸ் எதிர்கொண்டபோது வட்காம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானிக்கு ஆதரவளித்தது காங்கிரஸ். காங்கிரஸ் ஆதரவுடன் வட்காம் தொகுதியில் இருந்து சுயேச்சையாக போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானி 84,785 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். தொடர்ந்து தேசிய அளவில் கவனம் பெற்றுவந்த இளம்தலைவராக வலம்வந்தார்.
இதனிடையே, ஜிக்னேஷ் மேவானியை நேற்று இரவு 11:30 மணியளவில் இருந்து அசாம் போலீஸார் கைது செய்துள்ளனர். பாலன்பூர் சர்க்யூட் ஹவுஸில் இருந்தபோது அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். என்ன வழக்கு உள்ளிட்ட எந்த விவரங்களையும் அவர்கள் ஜிக்னேஷ் தரப்பினருக்கு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.