
தன்னை திருமணத்தில் இருந்து காப்பாற்றும் படி காதலனுக்கு பெண் 10 ரூபாய் நோட்டில் எழுதியுள்ளது இணையத்தில் வைராகி வருகிறது. பணத்தில் பேயரெழுதுவது என்பது சிறுவயது முதலே அனைவரும் செய்த ஒன்று. மேலும் அது பலருக்கும் பிடித்தமான ஒன்றும் கூட. பலரும் தன் மனதில் உள்ளவைகளை, மனதிற்கு நெருக்காமானவர்களின் பெயர்களை பணத்தில் எழுதி வைப்பர். அந்த வகையில் ஒரு பெண் தனது காதலனுக்கு 10 ரூபாய் நோட்டில் தனது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னை இதிலிருந்து மீட்க வேண்டும் என்றும் எழுதியுள்ளார். இந்த நோட்டின் படம் தற்போது இளையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
பலரும் அதனை பகிர்ந்து வருகின்றனர். இந்தியாவில் காதல் திருமணங்கள் செய்துக்கொள்வதில் பல சிக்கல்கள் உள்ளன. பெண்ணின் பெற்றோர்கள் அவ்வளவு எளிதாக காதலை ஏற்பதில்லை. இதனால் அவர்களின் காதல் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும். நிலைமை அப்படி இருக்கையில் தன் காதலுக்காக போராடும் பெண்ணின் செயல் இணையத்தில் வைராக பரவி வருகிறது. குசும் என்ற பெண் தான் காதலிக்கும் நபரை மணந்து கொள்ள முடியாத இக்கட்டான நிலைக்கு ஆளாகி உள்ளார். அதிலிருந்து தன்னைக் காப்பாற்ற வருமாறு தனது காதலர் விஷாலுக்கு 10 ரூபாய் பண நோட்டில் எழுதி அதனை அனுப்பியுள்ளார்.
அந்த பத்து ரூபாய் நோட்டில், விஷால், என் திருமணம் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி அன்று நிச்சயிக்கப்பட்டுள்ளது. என்னைக் காப்பாற்று. நான் உன்னை காதலிக்கிறேன். உன் குசும் என்று எழுதியுள்ளார். இந்த பண நோட் கிடைத்த ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில், பகிர்ந்துள்ளார், விஷால் செய்தியைப் பெறுவார் என்று நம்புகிறேன். ட்விட்டர் நண்பர்களே, உங்கள் சக்தியைக் காட்டுங்கள். ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு முன் குசுமின் இந்த செய்தியை விஷாலுக்கு வழங்க வேண்டும். காதலில் இருக்கும் இருவர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அவரை தொடர்ந்து பலரும் இதனை தங்களது டிவிட்டர் பக்கத்தில் பகிருந்து வருகின்றனர். அந்த பெண் எழுதிய 10 ரூபாய் நோட்டின் படத்துடன் கூடிய பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.