உத்தரகாண்டை உலுக்கிய கனமழை… 34 பேர் பலி.. பிரதமர் கவலை

Published : Oct 20, 2021, 08:16 AM IST
உத்தரகாண்டை உலுக்கிய கனமழை… 34 பேர் பலி.. பிரதமர் கவலை

சுருக்கம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக இருக்கிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக இருக்கிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

ஏராளமானோர் மழை, வெள்ளத்தில் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் களம் இறங்கி உள்ளனர். பலர் காணாமல் போய் இருப்பதால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீட்டை உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் வீடுகளை இழந்தவர்களுக்கு தலா 1.9 லட்சம் இழப்பீடு அளிக்கப்படுவதாகவும் கூறி உள்ளது.

இதனிடையே உத்தரகாண்ட் நிலைமையை கண்டு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் பதிவை வெளியிட்டு உள்ளார். இது குறித்து தமது பதிவில் அவர் கூறி இருப்பதாவது:

உத்தரகாண்ட்டில் மழை, வெள்ளத்தால் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று விரைவில் குணமாக வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார். 

PREV
click me!

Recommended Stories

மெட்ரோ வேகமா? ஸ்கூட்டர் வேகமா? பெங்களூரு டிராபிக்கில் ஒரு ஜாலி பந்தயம்!
பீகாரில் தவறுதலாக ஆண்களுக்குச் சென்ற ரூ.10,000.. திருப்பித் தரமால் தண்ணி காட்டும் கிராமவாசிகள்!