உத்தரப் பிரதேசம் ,மணிப்பூர் மாநிலங்களில் இன்று இறுதிக்கட்ட தேர்தல்…: வாக்குப்பதிவையொட்டி பலத்த பாதுகாப்பு

 
Published : Mar 08, 2017, 05:59 AM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
உத்தரப் பிரதேசம் ,மணிப்பூர் மாநிலங்களில் இன்று  இறுதிக்கட்ட தேர்தல்…: வாக்குப்பதிவையொட்டி பலத்த பாதுகாப்பு

சுருக்கம்

UP. Manipur election

உத்தரப் பிரதேசம் ,மணிப்பூர் மாநிலங்களில் இன்று  இறுதிக்கட்ட தேர்தல்…: வாக்குப்பதிவையொட்டி பலத்த பாதுகாப்புஉத்தரப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில், இன்று இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி நடைபெற்று வந்த பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணையை, கடந்த ஜனவரி மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, பிப்ரவரி மாதம் 4-ம் தேதியன்று, கோவா மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

உத்தரகாண்டில் பிப்ரவரி 15-ம் தேதியன்று தேர்தல் நடைபெற்றது. மணிப்பூரில், கடந்த 4-ம் தேதி முதல்கட்டமாக, 38 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.

இறுதிக்கட்ட தேர்தல் 22 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. இதேபோல், உத்தரப் பிரதேசத்தில் இதுவரை 6 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல், 40 தொகுதிகளில் இன்று நடைபெற கிறது.. வாக்குப்பதிவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

மணிப்பூர் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் இறுதிக்கட்ட தேர்தலையொட்டி நடைபெற்று வந்த பிரச்சாரம், நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது.

இதனையடுத்து, இன்று தேர்தல் நடைபெறகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

இதனிடையே, உத்தரகாண்ட் மற்றும் உத்தரப் பிரதேசத்தில், தலா ஒரு தொகுதியில் வேட்பாளர்கள் இறந்ததால், அத்தொகுதிகளில் மட்டும் நாளை தேர்தல் நடைபெறும். 5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள், வரும் 11-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்..

PREV
click me!

Recommended Stories

வி.வி.ராஜேஷுக்கு லக்..! ஶ்ரீலேகாவுக்கு ஏமாற்றம்.. திருவனந்தபுரம் மேயர் ரேஸில் பாஜகவின் அதிரடி முடிவு
7 மணி ஆனா ஊரே ஆஃப் ஆயிடும்! தினமும் 2 மணி நேரம் டிஜிட்டல் விரதம் இருக்கும் வினோத கிராமம்!