சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக சாலை வசதி பெறும் கிராமங்கள்!

By Manikanda Prabu  |  First Published Oct 15, 2023, 10:59 AM IST

சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 8 கிராமங்கள் சாலை வசதியை பெறவுள்ளன


உத்தரகாண்ட் மாநிலத்தின் எல்லை மாவட்டமான பித்தோராகரில் உள்ளா 8 கிராமங்கள் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக சாலை இணைப்பை பெறவுள்ளன. அக்கிராமங்களில் கான்கிரீட் சாலைகள் அமைக்கப்படவுள்ளன. சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ள இக்கிராமங்களில் வசிப்பவர்கள், முறையான சாலை வசதிகள் இல்லாததால், மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மத்திய அரசின் கிராமத் திட்டத்தின் கீழ் இந்த சாலைகள் அமைக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

“இந்த சாலைகளுக்கான முன்மொழிவுகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, கொள்கையளவில் ஒப்புதல் கிடைத்துள்ளது.” என்று மத்திய அரசு கிராமத் திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் நித்திகா கண்டேல்வால் கூறியுள்ளார்.

Tap to resize

Latest Videos

திடாங், சீபு மற்றும் மார்ச்சா கிராமங்களில் 10.01 கி.மீ., ரோங்கானில் 1.025 கி.மீ., பஞ்சு குந்த் (காங்கர்) 6.40 கி.மீ., தோலாவில் 3.325 கி.மீ., கிம்லிங்கில் 23.20 கி.மீ. சாலை அமைக்கப்படும் என மாநில ஊரக வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது. இதுதவிர, வன எல்லைக்கு உட்பட்ட ஹிரா குமாரி கிராமத்தில் சாலைகள் அமைக்க இந்தோ திபெத்திய எல்லைக் காவல் துறை கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை, ரூ.758 கோடி மதிப்பிலான 510 திட்டங்களுக்கு தலைமைச் செயலாளர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன.

ம.பி., சத்தீஸ்கர், தெலங்கானா: காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

மேலும், உத்தரகாண்ட் ஊரக வளர்ச்சி மற்றும் இடம்பெயர்வு தடுப்பு ஆணையம், மாநிலத்தில் எல்லை சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான ஒரு விரிவான திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து ஆணையத்தின் துணைத் தலைவர் எஸ்.எஸ்.நேகி கூறுகையில், “அரசாங்கத்தின் திட்டங்கள் மற்றும் பல்வேறு மட்டங்களில் விழிப்புணர்வு, ஊக்குவிப்பு காரணமாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் ஏழு சதவீதம் இடம்பெயர்வு குறைந்துள்ளது.” என்றார்.

“மோசமான உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அத்தியாவசிய வசதிகள் இல்லாமை காரணமாக எல்லை மாவட்டங்கள் மக்கள் பெருமளவில் வெளியேறுகின்றனர்” என எஸ்.எஸ்.நேகி கூறுகிறார். எல்லைகளில் செய்யப்படும் உள்கட்டமைப்பின் மேம்பாடு இந்த இடம்பெயர்வை மாற்றியமைக்கும், மேலும், ராணுவத் துருப்புக்கள் மற்றும் இயந்திரங்கள் கொண்டு செல்வதற்கும் இது உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, உத்தரகாண்டின் மூன்று எல்லை மாவட்டங்களில் உள்ள 185 கிராமங்களில் பூஜ்ஜிய மக்கள்தொகை உள்ளது. உள்ளூர் மக்களால் இந்த கிராமங்கள் "பேய் கிராமங்கள்" என்று அழைக்கப்படுகின்றன.

click me!