செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் தாமி, உத்தரகாண்ட் அரசு மீட்கப்பட்ட ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று என்று அறிவித்தார்.
உத்தரகாசியில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களும் வெற்றிகரமான மீட்கப்பட்ட நிலையில், அந்தத் தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்திருக்கிறார்.
முதல்வர் புஷ்கர் சிங் தாமி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டபோது அவர்களை மாலை அணிவித்து வரவேற்று, சிறிது நேரம் அவர்களுடன் உரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் தாமி, உத்தரகாண்ட் அரசு மீட்கப்பட்ட ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று என்று அறிவித்தார்.
மேலும், இந்தத் தொழிலாளர்களை பணியமர்த்திய நிறுவனங்கள் ஊதியம் பிடித்தம் செய்யாமல் 15 முதல் 30 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இவங்கதான் உண்மையான ஹீரோஸ்! மீட்புக் குழுவினரை கட்டித்தழுவி நன்றி தெரிவித்த தொழிலாளர்கள்!
சுரங்கப்பாதையின் முகப்பில் இருந்த பாபா பைத்யநாத் கோயில் இடிக்கப்பட்டது தான் இந்த விபத்துக்குக் காரணம் என்ற செய்தி பரவிய நிலையில், அந்த இடத்தில் புதிய கோயில் கட்டப்படும் என்றும் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வாக்குறுதி அளித்துள்ளார். மத்திய அரசு உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்டப்பட்டு வரும் அனைத்து சுரங்கப்பாதைகள் பற்றி விரிவான ஆய்வு நடத்தவும் வலியுறுத்தி இருக்கிறார்.
17 நாள் மீட்பு நடவடிக்கையின் போது உலகம் முழுவதும் இருந்து கிடைத்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்த அவர், இயந்திரங்கள் செயல்படுவதை நிறுத்தியபோது எலிவளை முறையில் துளையிட்ட குழுவினரைப் பாராட்டினார். அனைத்து தொழிலாளர்களும் தற்போது உடல்நலத்துடன் இருப்பதாகவும் சில நாட்களுக்கு அவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார்கள் என்றும் கூறினார். மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் அடுத்தடுத்த முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் வெற்றிகரமான மீட்பு நடவடிக்கை குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவரின் கூட்டு முயற்சியையும் அவர் பாராட்டியுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D