
உத்தரப் பிரதேசத்தில் திருமண விழாவில் பங்கேற்ற சமாஜ்வாடி எம்எல்ஏ ஜகத்ராம் பஸ்வான், அங்கு நடனமாடிய பெண்கள் மீது பணத்தை வாரி இறைத்து அவர்களுடன் அநாகரிமாக நடனமாடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
ஜகத்ராம் பஸ்வான், திருமண விழா ஒன்றில் பங்கேற்றபோது, அங்கு சில பெண்கள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அதை பார்த்து மகிழ்ச்சி அடைந்த எம்எல்ஏ ஜகத்ராம் பஸ்வான், அந்த பெண்களுடன் சேர்ந்து குத்தாட்டத்தில் இறங்கினார்.
மேலும் அவர், தனது சட்டை பாக்கெட்டில் இருந்த பணத்தை அள்ளி எடுத்து, அந்த பெண்கள் மிது ரூபாய் நோட்டுக்களை வாரி இறைத்து, அவர்களின் உடலில் கைகள் தொடும்படி ஆபசமாக நடனமாடினார்.
பெண்களின் உடலில் கையை வைத்தது மட்டுமின்றி, அவர்களின் ரவிக்கையில் பணத்தை சொருகினார். இதை பார்த்ததும், அங்கிருந்த சிலர், அவரை தட்டிக் கேட்கமுடியாமல், தங்களது செல்போன் மூலம் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ காட்சி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதை பார்த்த சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும், சம்பந்தப்பட்ட எம்எல்ஏ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் மாநில பிரிவு செய்தி தொடர்பாளர் அருண் பிரகாஷ் சிங் கூறுகையில், "சமாஜ்வாடி கட்சியின் உண்மையான முகம் இதுதான். இந்த வீடியோ மூலமாக மக்களுக்கு இது தெரியவந்துள்ளது" என்றார்.