உத்திரபிரதேசம்.. மீரட் மருத்துவக் கல்லூரியில் 80 கர்ப்பிணிப் பெண்களுக்கு HIV - அதிர்ச்சியில் மூழ்கிய மக்கள்!

Ansgar R |  
Published : Aug 06, 2023, 07:27 PM IST
உத்திரபிரதேசம்.. மீரட் மருத்துவக் கல்லூரியில் 80 கர்ப்பிணிப் பெண்களுக்கு HIV - அதிர்ச்சியில் மூழ்கிய மக்கள்!

சுருக்கம்

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள அரசு மருத்துவமனையில், கடந்த 16 மாதங்களில் மட்டும் சரியாக 81 கர்ப்பிணிப் பெண்களுக்கு HIV பாதிப்பு ஏற்பட்டுள்ளது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விசாரணை தற்போது துவங்கியுள்ளது. 

எச்ஐவி இருப்பது உறுதிசெய்யப்பட்ட 35 பெண்களுக்கு ஏற்கனவே குழந்தை பிறந்துள்ளது. கவலையளிக்கும் வகையில், அந்த 35 கர்ப்பிணிப் பெண்களும் எச்.ஐ.விக்கு நேர்மறையாக, அதாவது HIV Positive கட்டத்தில் உள்ளது வேதனை அளிக்கும்விதமாக உள்ளது. உள்ளூர் சுகாதாரத் துறை தொடர்ந்து அந்த பெண்களை கண்காணித்து வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இக்கட்டான நிலைமையின் தீவிரத்தை அதிகரிக்கும் வகையில், அந்த கல்லூரி மருத்துவமனையானது கடந்த 2022 மற்றும் 2023ம் ஆண்டுக்கு இடையில், அங்கு அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களிடையே மொத்தம் 33 புதிய HIV வழக்குகள் பதிவாகியுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த ஜூலை 2023 நிலவரப்படி 13 கூடுதல் வழக்குகள் அதிகரித்துள்ளன.

தெலங்கானாவின் புரட்சி வீரர்.. கவிஞர் கதர் என்ற கும்மாடி விட்டல் ராவ் காலமானார் - அரசியல் தலைவர்கள் இரங்கல்

மேலும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு, அவர்கள் 18 மாத வயதை எட்டும்போது அவர்களுக்கும் எச்.ஐ.வி பரிசோதனைகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட அனைத்துப் பெண்களும் கல்லூரியின் ART மையத்தில் சிகிச்சை பெற்று வருவதால், பாதிக்கப்பட்ட நபர்களின் ஆரோக்கியத்தை நிர்வகிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்கள் அனைவரும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.

மீரட்டின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அகிலேஷ் மோகன் பிரசாத், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களுக்கு பிறந்த குழந்தைகளின் நலன் குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த பெண்களிடையே எப்படி எச்ஐவி பரவியது என்பது பற்றிய விரிவான தகவல்கள் தற்போது கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த பிரச்சினைக்கு பதிலளிக்கும் விதமாக, HIV வழக்குகள் பற்றிய முழுமையான விசாரணையை நடத்தவும், எச்.ஐ.வி நோய்த்தொற்று அவர்களுக்கு எப்படி ஏற்பட்டது என்பதை கண்டறியவும், ஒரு பிரத்யேக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

இஸ்ரோ முதல் கோவிட்-19 வரை! சுதந்திர இந்தியாவின் வியக்க வைக்கும் அறிவியல் தொழில்நுட்ப சாதனைகள்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!