PM Modi: தன்னுடைய காலில் விழுந்த பட்டியலின தலைவர்.. வேண்டாம் சைகை காட்டி.. அவரது காலில் விழுந்த பிரதமர் மோடி!

Published : Feb 21, 2022, 01:17 PM ISTUpdated : Feb 21, 2022, 01:32 PM IST
PM Modi: தன்னுடைய காலில் விழுந்த பட்டியலின தலைவர்..  வேண்டாம் சைகை காட்டி.. அவரது காலில் விழுந்த பிரதமர் மோடி!

சுருக்கம்

பிரதமர் மோடிக்கு ராமர் சிலையை பரிசளித்தபோது, ​​பிரதமர் மோடியின் காலைத் தொட்டு வணங்கினார் அவதேஷ் கட்டியார். பிரதமர் மோடி உடனே தன்னுடைய கால்களைத் தொட வேண்டாம் என்று சைகை காட்டி. அவரது கால்களில் தொட்டு வணங்கினார். அவதேஷ் கட்டியார், முன்பு உன்னாவ் மாவட்ட பாஜக பொதுச் செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

உத்தரபிரதேச தேர்தல் பரப்புரை மேடையில் பிரதமர் மோடியின் கால்களை தொட்டு வணங்கிய பட்டியலினத்தை  சேர்ந்த தலைவரை வேண்டாம் வேண்டாம் என சைகை காட்டி பதிலுக்கு  அவரது கால்களை தொட்டு வணங்கிய பிரதமர் மோடியின் வீடியோ வைரலாகி வருகிறது. 

இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 3 கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. இன்னும் 4 கட்ட தேர்தல்கள் உள்ளதால் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி உத்தரபிரதேச பேரணிக்கு வந்தபோது, அம்மாநிலத்தின் பாஜக தலைவர் சுதந்திர தேவ் சிங், பாஜகவின் உன்னாவ் மாவட்டத் தலைவர் அவதேஷ் கட்டியார் ஆகிய இருவரும் பிரதமருக்கு ராமர் சிலையை வழங்கினர்.

பிரதமர் மோடிக்கு ராமர் சிலையை பரிசளித்தபோது, ​​பிரதமர் மோடியின் காலைத் தொட்டு வணங்கினார் அவதேஷ் கட்டியார். பிரதமர் மோடி உடனே தன்னுடைய கால்களைத் தொட வேண்டாம் என்று சைகை காட்டி. அவரது கால்களில் தொட்டு வணங்கினார்.

அவதேஷ் கட்டியார், முன்பு உன்னாவ் மாவட்ட பாஜக பொதுச் செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!