கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி-பேருந்து நேருக்கு நேர் மோதல்... 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!

By vinoth kumarFirst Published Jan 11, 2020, 10:35 AM IST
Highlights

உத்தரபிரதேச மாநிலம் கன்னாஜ் மாவட்டம், குர்சகாய்கஞ்ச் பகுதியில் இருந்து நேற்று இரவு ஜெய்ப்பூர் நோக்கி ஆம்னி சொகுசு பேருந்து 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து, கன்னாஜ் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பேருந்தும்- லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் தீ பற்றி எரிந்தலில் 20 பேர் உடல் கருகி பரிதாபமாக  உயிரிழந்தனர். 25 பேர் சிறிய காயங்களுடன் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

உத்தரபிரதேசத்தில் பேருந்தும்- லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு வாகனங்களும் தீ பிடித்து எரிந்ததில் பேருந்தில் பயணித்த 20 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கன்னாஜ் மாவட்டம், குர்சகாய்கஞ்ச் பகுதியில் இருந்து நேற்று இரவு ஜெய்ப்பூர் நோக்கி ஆம்னி சொகுசு பேருந்து 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து, கன்னாஜ் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பேருந்தும்- லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் தீ பற்றி எரிந்தலில் 20 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 25 பேர் சிறிய காயங்களுடன் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

இதுதொடர்பாக உடனே தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாததால் டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த விபத்து தொடர்பாக பிரதமர் மோடி, தனது கவலையையும், இரங்கலையும் தெரிவித்துள்ளார். விபத்தில் பலர் உயிர் இழந்துள்ளனர். இறந்தவர்களின் உறவினர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தி உள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், விபத்து தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை கேட்டிருப்பதாகவும் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

click me!