முதியோர் கவனத்துக்கு….. தமிழகம்தான் பாதுகாப்பில்லாத மாநிலமாம்: மத்திய அரசு தகவலல் அதிர்ச்சி ....

By Selvanayagam PFirst Published Jan 10, 2020, 11:17 PM IST
Highlights

நாட்டிலேயே  முதியோருக்கு பாதுகாப்பில்லாத மாநிலம் தமிழம் தான் என்று மத்திய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதாவது கடந்த 2018-ம் ஆண்டில் நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 152 முதியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அடுத்தார்போல் மகாராஷ்டிராவில் 135 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 127 முதியோரும் கொல்லப்பட்டுள்ளனர்.

முதியோர் அதிகமாக வாழும் மாநிலங்கள் என்று வகைப்படுத்தப்படும்போது மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் 11சதவீதம் கூடுதலாக முதியோர் வசிக்கின்றனர். அதேசமயம் முதியோருக்கு எதிரான வழக்குகள் என்ற வீதத்தில் கணக்கெடுத்தால் தமிழகம்  3,162 வழக்குகளுடன 3-வது இடத்தில் இருக்கிறது

முதியோர் வாழும் மாநிலங்களில் 10 சதவீதம் குறைவாக வசிக்கும் மாகாரஷ்டிரா மாநிலத்தில் முதியோருக்கு எதிராக அதிகபட்சமாக 5,961 குற்றங்கள் நடந்துள்ளன. 

அடுத்த இடத்தில் மத்தியப்பிரதேசத்தில்  3,967 குற்றங்கள் நடந்துள்ளனமுதியோரை கொலை செய்ய முயற்சித்தல் எனும் பதிவான வழக்குகளில் நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 76 வழக்குகள் பதிவாகியுள்ளன.  

கொலை வழக்கிலும் தமிழகத்தில் 152 முதியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 182 கொள்ளை வழக்குகளும்,16 வழக்குகள் வீட்டை விட்டு துரத்தியது தொடர்பான கொடுமை வழக்குகளும்  பதிவாகியுள்ளன மற்ற வயதினரிடம் வழப்பறி செய்வதைக்காட்டிலும் குழந்தைகள், முதியோரிடம் எளிதாக கொள்ளையடித்துவிடலாம். 

ஆனால், குழந்தைகளிடம் அதிகமான பணம் பொருட்கள் இருக்காது. ஆனால், உடல்ரீதியாகக பலவீனமாக இருக்கும் முதியோரை எளிதாக தாக்கிவிட்டு பணம், பொருட்களை கொள்ளையடிக்கலாம் என்பதால் கொள்ளையர்கள் முதியோர் மீது அதிகமான கவனத்தை திருப்புகின்றனர். 

இதைத் தடுக்க போலீஸார் முதியோர் வசிக்கும் பகுதியி்ல் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும், வீட்டில் முதியோர் தனியாக இருந்தால் போலீஸாருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்

click me!