10 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை ....தமிழகம்2-வது இடம்: 29 ஆயிரம் கொலை: 2018-ம் ஆண்டு குறித்து என்சிஆர்பி அதிர்ச்சித் தகவல்,,,

Selvanayagam P   | others
Published : Jan 11, 2020, 12:11 AM IST
10 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை ....தமிழகம்2-வது இடம்: 29 ஆயிரம் கொலை: 2018-ம் ஆண்டு குறித்து என்சிஆர்பி அதிர்ச்சித் தகவல்,,,

சுருக்கம்

கடந்த 2018-ம் ஆண்டில் நாடுமுழுவதும் 10ஆயிரத்து 349 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள், தினமும் சராசரியாக 80 கொலைகள் என்ற ரீதியில் 29 ஆயிரம் கொலை வழக்குகள் பதிவாகின என்று தேசிய குற்ற ஆவண காப்பகம்(என்சிஆர்பி) தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய குற்றஆவணக் காப்பகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இதில் விவசாயிகள் தற்கொலையில் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்த இடத்தில் தமிழகம் இருக்கிறது. ஒட்டுமொத்த விவசாயிகள் தற்கொலையில் 50 சதவீதம் 5 மாநிலங்கள் மட்டும் நடந்துள்ளது. 

அதாவது தமிழகம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், மத்தியப்பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தற்கொலை நடந்துள்ளன. 
இதில் மகாராஷ்டிராவில் 17,972, தமிழகத்தில் 13,896, மம்தா பானர்ஜி முதல்வராக இருக்கும் மேற்கு வங்கத்தில் 13,255, காங்கிரஸ் கட்சி ஆளும் மத்திய பிரதேசத்தில் 11,775, கர்நாடகா மாநிலத்தில் 11,561 தற்கொலைகள் நடந்துள்ளன.

தற்கொலை செய்து கொண்டவர்களில் 7.7 சதவீதம் பேர் (10,349) விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்கள். 
மேலும், 2018-ம் ஆண்டில் நாட்டில்  சராசரியாக தினமும் 80 கொலை மற்றும் 91 பலாத்காரங்கள் நடந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 


கடந்த 2018-ம் ஆண்டில் ஐபிசியின் ஒட்டுமொத்தமாக 50 லட்சத்து74ஆயிரத்து 634 வழக்குகள் பதிவாகன. இது 2017-ல் பதிவான வழக்குகளைவிட அதிகம்.
இதுபோல கடந்த 2018-ம் ஆண்டில் 29 ஆயிரத்து 17 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன. 

இது 2017-ம் ஆண்டைக் காட்டிலும் 1.3 சதவீதம் அதிகம். 2017-ல் 95,893 ஆக இருந்த கடத்தல் வழக்குகள் 2018-ம் ஆண்டில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்தது 536 ஆக அதிகரித்துள்ளது. இதில் 80,871 பேர் பெண்கள் ஆவர்.பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் 2017ம் ஆண்டில் 3லட்சத்து59ஆயிரத்து 849 ஆக இருந்த நிலையில் 2018ம்ஆண்டில் 3லட்சத்து78ஆயிரத்து 277 ஆக அதிகரித்துள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

PREV
click me!

Recommended Stories

இந்தியா நடுநிலையான நாடு அல்ல.. அமைதி தான் முக்கியம்.. புடினிடம் உறுதியாகக் கூறிய மோடி!
ஆர்எஸ்எஸ் நீதிபதி.. நாடாளுமன்றத்தில் வார்த்தையை விட்ட டி.ஆர்.பாலு..! பொங்கியெழுந்த பாஜக எம்.பி.க்கள்!