சிஏஏ பற்றி யாரும் பயப்படவேண்டாம்: பிரதமரைச் சந்தித்தபின் உத்தவ் தாக்கரே பல்டி

Published : Feb 22, 2020, 05:53 PM IST
சிஏஏ பற்றி யாரும் பயப்படவேண்டாம்: பிரதமரைச் சந்தித்தபின் உத்தவ் தாக்கரே பல்டி

சுருக்கம்

குடியுரிமை திருத்தச்சட்டம், என்பிஆர், என்ஆர்சி குறித்து யாரும் பயப்பட வேண்டாம், யாரும் நாட்டைவிட்டு அனுப்பப்படமாட்டார்கள் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமர் மோடியைச்சந்தித்தபின் தெரிவித்தார்

குடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு ஆதரவு அளிக்கமாட்டோம் என்று தெரிவித்துவந்த உத்தவ் தாக்கரே பிரதமரைச்சந்தித்தபின் திடீரென பல்டி அடித்துள்ளார். மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக டெல்லிக்கு வந்த உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்தார். அவருடன் அவரது மகன் ஆதித்ய தாக்கரே மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய்  ரவுத்தும் பிரதமர் மோடியை சந்தித்தனர். இந்த சந்திப்புக்குப் பின்  செய்தியாளர்களிடம் உத்தவ் தாக்கரே பேசினார் . அவர் கூறுகையில் “ பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியது பயனுள்ளதாக இருந்தது. மகாராஷ்டிர மாநில அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள் , குடியுரிமை திருத்த சட்டம் குறித்தும் பேசினேன்.

 குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்தார் குடியுரிமை திருத்த சட்டத்தினால் யாருக்கும் எந்த ஆபத்தும் வராது. ஏதாவது ஒரு கருத்தைக் கூறுவது என்றால் அது அதற்கான காரணங்கள் ஒருவரிடம் இருக்க வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்தால்  யாருக்கு ஆபத்து? எப்படி ஆபத்து? என்ற விஷயங்களை காரணத்தோடு கூற அவர் தயாராக இருக்கவேண்டும். ஆனால்பலர் குடியுரிமை திருத்த சட்டத்தையும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை தேசிய குடிமக்கள் பதிவேட்டையும்  ஏன் எதிர்க்கிறார்கள் கூற முடியவில்லை சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்த பிரச்சனைகள் தொடர்பாக போராடும் படி மக்களை தூண்டி வருகிறார்கள்

 தேசிய மக்கள் தொகை பதிவேட்டுப் பணிகளை தான் நிறுத்தி வைக்கப் போவதில்லை .அவை முறைப்படி நடைபெறும் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிற மக்கள் தொகை கணக்கெடுப்பு தான் அது அதை ஏன் நிறுத்த வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் துவங்கியதும் அது மிகவும் அபாயகரமானது என்ற எண்ணம் சிலருக்கு ஏற்பட்டுள்ளது . குடியுரிமை திருத்த சட்டம் அல்லது தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து மக்கள் கவலைப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை” எனத் தெரிவித்தார்

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!