UPSC Result 2021: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு.. தமிழக மாணவி சுவாதி ஸ்ரீ 42வது இடம் பிடித்து சாதனை !!

Published : May 30, 2022, 02:09 PM ISTUpdated : May 30, 2022, 02:27 PM IST
UPSC Result 2021: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு.. தமிழக மாணவி சுவாதி ஸ்ரீ 42வது இடம் பிடித்து சாதனை !!

சுருக்கம்

UPSC Result 2021 : எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெற்ற நிலையில், மத்திய அரசு தேர்வாணையம் இன்று தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டை சேர்ந்த சுவாதி ஸ்ரீ அகில இந்திய அளவில் 42வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெற்ற நிலையில், மத்திய அரசு தேர்வாணையம் இன்று தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு தேர்வாணையம்(யுபிஎஸ்சி) சிவில் சர்வீஸஸ் 2021 தேர்ச்சி பெற்றவர்களின் இறுதி பட்டியலை  வெளியிட்டுளளது. ஆணையத்தின் www.upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ  இணையளத்தில் காணலாம்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் நடத்திய சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு, ஏப்ரல் முதல் மே வரையில் நடத்திய நேர்முகத் தேர்வு அடிப்படையில் இந்த இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டுளளது. ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் மற்றும் மத்தியப் பணிகள் குரூப் ஏ மற்றும் குரூப் பி பணிகளுக்கு மொத்தம் 685 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.தமிழ்நாட்டை சேர்ந்த சுவாதி ஸ்ரீ அகில இந்திய அளவில் 42வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்த முறை,யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் ஸ்ருதி ஷர்மா என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.அங்கிதா அகர்வால் இரண்டாவது இடத்தையும், காமினி சிங்லா மூன்றாவது இடத்தையும்,ஐஸ்வர்யா என்பவர் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளார். அதே சமயம்,தமிழகம் அளவில் ஸ்வாதி ஸ்ரீ என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.ஆனால்,இவர் தேசிய அளவில் 42 வது இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 127 பேர் இருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  இட ஒதுக்கீட்டுப் பிரிவினர்,  பொது பட்டியலில் தேர்வாகி பதவிகளை தேர்வு செய்யும் பட்சத்தில்,  காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்படுவார்கள்.

80 பேர் இரண்டாவது இருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர் . யுபிஎஸ்சி நுழைவு தேர்வு முடிவுகளை அருகிலுள்ள உதவி மையத்தை நாடியும்,  011-23385271/011-23381125 / 011-23098543 என்ற எண்களுக்கு போன் செய்தும் தெரிந்துகொள்ளலாம். வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க : Rajya Sabha Elections : 18 வருஷம் ஆச்சு.. எம்.பிக்கு கூட எனக்கு தகுதி இல்லையா ? கடுப்பான நடிகை நக்மா !

இதையும் படிங்க : கணவன் கண்முன்னே கள்ளகாதலனுடன் மனைவி உல்லாசம்.. வாழைத்தோப்பில் கொன்று புதைத்த சம்பவம் 

PREV
click me!

Recommended Stories

நாட்டின் முதல் வந்தேபாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ஆன்லைனில் வாக்கி-டாக்கி விற்பனை.. பிளிப்கார்ட், மீஷோ உள்ளிட்ட 8 நிறுவனங்களுக்கு விழுந்த அடி!