புதுச்சேரியில் ஜூன் 23 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு.. சனிக்கிழமைகளில் விடுமுறை.. அமைச்சர் அறிவிப்பு

Published : May 30, 2022, 12:52 PM IST
புதுச்சேரியில் ஜூன் 23 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு.. சனிக்கிழமைகளில் விடுமுறை.. அமைச்சர் அறிவிப்பு

சுருக்கம்

புதுச்சேரியில் ஜூன் 23 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கபடும் என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.  

கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் ஜூன் 13 ஆம் தேதி 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று கடந்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் 11 ஆம் வகுப்புக்கு ஜூன் 27  ஆம் தேதியும் 12 ஆம் வகுப்புக்கு ஜூன் 20 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

மேலும் பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்போடு பொதுத்தேர்வு தேதி, விடுமுறை நாட்கள், காலாண்டு,அரையாண்டு தேர்வு தேதி உள்ளிட்டவைகளும் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் ஜூன் 23 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: ஏற்காடு கோடை விழா மலர்க் கண்காட்சி.. நாளை மறுநாள் நிறைவு.. படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

I-PAC ரெய்டு வழக்கில் மம்தாவுக்கு பேரிடி..! சட்டத்தின் ஆட்சிக்கு மிகப்பெரிய அவமதிப்பு .. உச்ச நீதிமன்றம் காட்டம்..!
மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல்: விரலில் 'மை' க்கு பதிலாக மார்க்கர் பேனாக்கள்.. பொங்கியெழுந்த எதிர்க்கட்சிகள்!