பரபரப்பு..! லாரி மீது மோதி தலைகீழாக அவிழ்ந்து நொறுங்கிய மினிலாரி.. 6 பேர் சம்பவ இடத்திலே பலி..

Published : May 30, 2022, 10:14 AM IST
பரபரப்பு..! லாரி மீது மோதி தலைகீழாக அவிழ்ந்து நொறுங்கிய மினிலாரி.. 6 பேர் சம்பவ இடத்திலே பலி..

சுருக்கம்

ஆந்திர பிரதேசத்தில் நிறுத்தப்பட்டிருந்த மினிவேன் மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கோர விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.  

ஆந்திர பிரதேசம் பல்நாடு மாவட்டம் ரெண்டசிந்தலா கிராமத்தில் நிறுத்தப்பட்டிருந்த மினிவேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மினி லாரியில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலே பலியாகினர். மேலும் 10 க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து நடந்த போது மினிவேனில் 39 பயணிகள் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் குர்ஜாலா அரசு மருத்துவமனை மற்றும் நர்சராவ்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.குர்ஜாலா டி.எஸ்.பி. ஜெய்ராம் தலைமையிலான போலீசார் சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து முதல்கட்ட விசாரணையில் குண்டூர் பகுதியை சேர்ந்த 38 பேர் டாடா ஏஸ் வாகனத்தில் ஸ்ரீசைலம் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிய போது பல்நாடு என்ற பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ட்ரக் மீது டாடா ஏஸ் வாகனம் வேகமாக மோதியது தெரியவந்துள்ளது. டாடா ஏஸ் வாகனத்தின் ஒட்டுநர் தூக்க கலக்கத்தில் வாகனத்தை இயக்கியதாலேயே விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 
 

மேலும் படிக்க: இவங்க ஆட்சியில் புதுச்சேரி கொலை நகரமாக மாறிவிட்டது... நாராயணசாமி பரபரப்பு குற்றச்சாட்டு!!

PREV
click me!

Recommended Stories

2027 மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடி நிதி ஒதுக்கீடு! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!
ஏதோ தவறு நடக்கிறது? கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சந்தேகத்தை கிளப்பும் உச்ச நீதிமன்றம்!