‘ஷூ’வுக்குள் படுத்திருந்த நல்லபாம்பு.. நொடியில் உயிர் தப்பிய இளைஞர்..!

Published : May 30, 2022, 10:26 AM IST
‘ஷூ’வுக்குள் படுத்திருந்த நல்லபாம்பு.. நொடியில் உயிர் தப்பிய இளைஞர்..!

சுருக்கம்

வெளியில் வைக்கப்படும் காலணிகளை அணியும் பொழுது அதனை முறையாக சுத்தம் செய்து பரிசோதிக்க வேண்டும் என விழிப்புணர்வுகளை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி இருந்த போதிலும் சில நேரங்களில் அவசரம் மற்றும் கவனக்குறைவு காரணமாக அப்படியே அணிந்து கொள்வது வழக்கம்.

ஷூவுக்குள் பதுங்கி இருந்த நல்லபாம்பு சரியான நேரத்தில் கண்டறியப்பட்டதால் அதனை அணிய முயன்றவர் உயிர் தப்பினார். 

வெளியில் வைக்கப்படும் காலணிகளை அணியும் பொழுது அதனை முறையாக சுத்தம் செய்து பரிசோதிக்க வேண்டும் என விழிப்புணர்வுகளை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி இருந்த போதிலும் சில நேரங்களில் அவசரம் மற்றும் கவனக்குறைவு காரணமாக அப்படியே அணிந்து கொள்வது வழக்கம். 

இந்நிலையில், கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் அருகே ரங்காபூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாத். இவர் வெளியில் செல்வதற்காக தனது ஷூவை எடுத்துள்ளார். அப்போது, ஷூவை அணிய முயன்ற போது 'உஷ்... உஷ்...' என ஒரு விதமாக சத்தம் கேட்க இளைஞர் ரங்கநாத் அதனை எடுத்துப் பார்க்கையில் உள்ளே சிறிய அளவிலான நல்லபாம்பு படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

இதனையடுத்து, பாம்பு பிடிக்கும் ஒருவரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அந்த இளைஞர் உடனடியாக குச்சியைக் கொண்டு அதனை வெளியே எடுத்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஒரு அமைச்சர் கூட வராததால் மாநிலங்களவை ஒத்திவைப்பு! சபைக்கு அவமானம் என எதிர்க்கட்சிகள் ஆவேசம்!
2027 மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடி நிதி ஒதுக்கீடு! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!