மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) குடிமைப் பணிகளுக்கான முதன்மை தேர்வு வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் தற்போது சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்( அனுமதி சீட்டு) வெளியாகியுள்ளது.
இந்திய ஆட்சிப் பணி, காவலர் பணி, வனப்பணி உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது. இந்த தேர்வு முதல் நிலை, முதன்மை, நேர்காணல் ஆகிய மூன்று கட்டங்களாக நடத்தப்படும். கொள்குறி வகையாக நடத்தப்படும் முதல் நிலைத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் முதன்மைத் தேர்வுக்கு தகுதி செய்யப்படுவர்.
முதன்மை தேர்வு மொத்தம் 9 தாள்களைக் கொண்டது. மொத்தம் 1,750 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறும். இதில், தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணல் தேர்வுக்குத் தகுதி பெறுவர். அதன்படி குடிமை பணிகளுக்கான நேர்காணல் தேர்வு 275 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
மேலும் படிக்க:தேர்வர்கள் கவனத்திற்கு!! டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு.. முக்கிய அறிவிப்பு
பின்னர் முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயார் செய்யப்படும். முதல்நிலைத் தேர்வு என்பது முதன்மை தேர்வு எழுதுவதற்கு வெறும் தகுதி தேர்வு என்பதால், இதில் பெறும் மதிப்பெண்கள் இறுதி பட்டியலுக்கு எடுத்துக் கொள்ளப்படாது.
நிகழாண்டிற்கான குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஜுன் 6ம் தேதி நடைபெற்றது. மேலும் அதற்கான தேர்வு முடிவுகள் அம்மாதம் 23ம் தேதி வெளியிடப்பட்டன. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 16,17,18,24,25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
மேலும் படிக்க:ஆசிரியர் தகுதி தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு.. தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இந்நிலையில் தற்போது முதன்மை தேர்வு எழுதுவதற்கான அனுமதிச் சீட்டை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படிஉ, தேர்வர்கள் www.upsc.gov.inமற்றும் www.upsconline.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் ஹால் டிக்கெட்( அனுமதி சீட்டு) யை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.