PM Modi Inaugurating New Schemes : நாடு முழுவதும் கல்வி மற்றும் திறன் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு, ஒரு குறிப்பிடத்தக்க படியாக, சுமார் ரூ.13,375 கோடி மதிப்பிலான பல திட்டங்களுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுவார்.
நாளை நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் சுமார் 13,375 கோடி மதிப்பிலான கல்வி திறன் மேம்பட்டு திட்டங்களை அறிமுகம் செய்து அதை நாட்டுக்கு அர்பணிக்கின்றார் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.
தேசத்திற்கு அர்ப்பணிக்கப்படும் திட்டங்களில் ஐஐடி பிலாய், ஐஐடி திருப்பதி, ஐஐடி ஜம்மு, ஐஐஐடிடிஎம் காஞ்சிபுரம் ஆகியவற்றின் நிரந்தர வளாகங்கள் அடங்கும்.
அது மட்டுமல்லாமல் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்கில்ஸ் (IIS), மேம்பட்ட தொழில்நுட்பங்களில் முன்னோடி திறன் பயிற்சி நிறுவனம் கான்பூரில் அமைந்துள்ளது. மற்றும் மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் இரண்டு வளாகங்கள் தேவ்பிரயாக் (உத்தரகாண்ட்) மற்றும் அகர்தலாவில் (திரிபுரா) ஆகிய இடங்களில் அமையவுள்ளது.
தெலுங்கானாவில் பயங்கரம்... 70 தெரு நாய்களுக்கு விஷ ஊசி செலுத்தி கொடூரக் கொலை!
ஐஐஎம் ஜம்மு, ஐஐஎம் போத்கயா மற்றும் ஐஐஎம் விசாகப்பட்டினம் ஆகிய மூன்று புதிய ஐஐஎம்களை பிரதமர் திறந்து வைக்கிறார். நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயாவின் 20 புதிய கட்டிடங்கள் மற்றும் 13 புதிய நவோதயா வித்யாலயா கட்டிடங்களையும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கல்வி திறன்மேம்பாடு திட்டத்தின் ஒரு பகுதியாக திறந்து வைக்கிறார்.
நாடு முழுவதும் உள்ள ஐந்து கேந்திரிய வித்யாலயா வளாகங்கள், ஒரு நவோதயா வித்யாலயா வளாகம் மற்றும் ஐந்து பல்நோக்கு அரங்குகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.