
உத்திர பிரதேச மாநிலத்தின் தலைமை காவல் துறை அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். பணியில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை, உத்தரவுகளை பின்பற்றுவதில்லை போன்ற காரணங்களால் தலைமை காவல் துறை அதிகாரி பணி நீக்கம் செய்யப்படுவதாக அம்மாநில அரசு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்துக்கான் டி.ஜி.பி.யாக முகுல் கோயல் இருந்து வந்தார். இவரை உ.பி அரசு டி.ஜி.பி. பதவியில் இருந்து நீக்கி முக்கியத்துவம் இல்லாத பதவியாக கருத்தப்படும் சிவில் பாதுகாப்புத்துறை டி.ஜி. பதவியில் பணி அமர்த்தி உத்தரவிட்டு இருக்கிது. உத்திர பிரதேச மாநிலத்தின் புதிய டி.ஜி.பி.யாக பிரசாந்த் குமார் பதவியேற்று இருக்கிறார்.
முதல்வர் அதிருப்தி:
முன்னாள் டி.ஜி.பி. முகுல் கோயல் பணியில் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திருப்தி அடையவில்லை என கூறப்படுகிறது. கடந்த மாதம் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு விவகாரம் குறித்து முதல்வருடன் நடைபெற இருந்த சந்திப்பில் முகுல் கோயல் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக உத்திர பிரதேச அரசு முகுல் கோயலுக்கு பணியில் ஆர்வம் இல்லை என்றும், அரசு உத்தரவுகளை மதிக்காமல் செயல்பட்டார் என்று கூறி பணி நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது. முன்னதாக இவர் இந்திய திபேத்திய எல்லை பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை ஆகியவற்றிலும் பணி செய்தது குறிப்பிடத்தக்கது.
சட்டம் ஒழுங்கு:
1987 ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியான முகுல் கோயல் கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் மாநிலத்தின் தலைமை காவல் துறை அதிகாரியாக பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்பு நிகழ்ச்சியின் போது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைப்பதோடு காவல் துறை அதிகாரிகள் மாநில மக்களுடன் இணைந்து செயல்படுவர் என்றும் உறுதி அளித்து இருந்தார்.
முன்னதாக இவர் அல்மோரா, ஜலாவுன், மணிப்பூர், ஹத்ராஸ், அசாம்கர், கோராக்புர், வாரணாசி, சாஹாரன்பூர் மற்றும் மீரட் போன்ற மாவட்டங்களில் எஸ்/எஸ்.எஸ்.பி. பதவிகளை வகித்து இருக்கிறார்.