அமைச்சரின் மருமகள் திடீர் தற்கொலை.. போலீஸ் தீவிர விசாரணை..!

Published : May 12, 2022, 10:39 AM IST
அமைச்சரின் மருமகள் திடீர் தற்கொலை.. போலீஸ் தீவிர விசாரணை..!

சுருக்கம்

 பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இந்தர் சிங் என்பவரின் மருமகள் சவிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இந்தர் சிங் என்பவரின் மருமகள் சவிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாபூரில்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இந்தர் சிங்கின். இவரதுது மகன் தேவ்ராஜ் சிங் என்பவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக மனைவி சவிதா பர்மர் (22) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம்  தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால், தற்கொலைக்கான காரணங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை எனிலும் குடும்ப சூழல் காரணமாக இருக்கலாம் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தற்கொலை சம்பவத்தின் போது அமைச்சர் போபாலிலும், சவிதாவின் கணவர் தேவ்ராஜ் அருகில் உள்ள கிராமத்திற்கும் சென்றதாக கூறப்படுகிறது. அமைச்சரின் மருமகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பீகாரில் திருப்பதி கோயில்! 1 ரூபாய்க்கு 10.11 ஏக்கர் நிலம் வழங்கிய நிதிஷ் குமார்!
சாவு எப்படியெல்லாம் வரும் பார்த்தீங்களா! நியூயார்கில் இந்திய மாணவி உயிரி**ழப்பு! நடந்தது என்ன?