ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த பெண்.. சாமர்த்தியமாக செயல்பட்ட ரயில்வே போலீஸ்.. வைரலாகும் வீடியோ..!

Nandhini Subramanian   | Asianet News
Published : May 12, 2022, 10:35 AM IST
ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த பெண்.. சாமர்த்தியமாக செயல்பட்ட ரயில்வே போலீஸ்.. வைரலாகும் வீடியோ..!

சுருக்கம்

போலீஸ் கான்ஸ்டபில் இழுத்ததில் ரயிலில் சிக்கிய பெண் பயணி, அவருடன் கீழே இறங்க ஆயத்தமான மற்றொரு பயணி மற்றும் கான்ஸ்டபில் என மூவரும் கீழே விழுந்தனர்.

ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த தலைமை கான்ஸ்டபில் ஓடும் ரயிலின் கீழ் விழ இருந்த பெண்ணை சாமர்த்தியமாக செயல்பட்டு காப்பாற்றிய சம்பவம் அரங்கேறியது. மேலும் இந்த சம்பவம் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஒடிசா மாநிலத்தின் புவனேஷ்வர் ரெயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து போது பெண் பயணி ஒருவர் கீழே இறங்க முயற்சித்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி பெண், ரெயில் மற்றும் நடைமேடைக்கு மத்தியில் சிக்கிக் கொண்டார். 
இதை கவனித்த ரயில்வே பாதுகாப்பு படை தலைமை கான்ஸ்டபில் சன்ராம் முண்டா கன நேரத்தில் சாமர்த்தியமாக செயல்பட்டு சிக்கிய பெண் பயணியை பத்திரமாக இழுத்து நடைமேடைக்கு கொண்டு வந்தார்.

பாராட்டு:

போலீஸ் கான்ஸ்டபில் இழுத்ததில் ரயிலில் சிக்கிய பெண் பயணி, அவருடன் கீழே இறங்க ஆயத்தமான மற்றொரு பயணி மற்றும் கான்ஸ்டபில் என மூவரும் கீழே விழுந்தனர். எனினும், ரயில்வே நிலையத்தில் ஏற்பட இருந்த பெரும் சம்பவம் போலீஸ் கான்ஸ்டபில் மேற்கொண்ட சாமர்த்திய நடவடிக்கையால் தவிர்க்கப்பட்டு விட்டது. 

வைரல் வீடியோவை பார்த்த ஐ.பி.எஸ். அதிகாரி சுதான்ஷு சாரங்கி ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் கான்ஸ்டபில் சன்ராம் முண்டாவின் சாமர்த்திய செயல் மூலம் பெண் காப்பாற்றப்பட்ட தகவலுடன், கான்ஸ்டபிலுக்கு பாராட்டுக்களை தெரிவித்து இருக்கிறார். இத்துடன் வீடியோவையும் தனது ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். 

வைரல் பெண்:

ரயில் தண்டவாளம் மற்றும் பிளாட்பார்மில் மக்கள் விபத்தில் சிக்கிக் கொள்வது, அதில் இருந்து தப்பிக்கும் அதிர்ச்சி வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆவது சகஜமான ஒன்றாக மாறி விட்டது. இவ்வாறு ஏற்கனவே வெளியான வீடியோ ஒன்றில் பெண் ஒருவர் தண்டவாளத்தை போன் பேசிக் கொண்டே கடக்க முயறி செய்கிறார். அப்போது தண்டவாளத்தில் சரக்கு ரயில் வந்தது. அதை பார்த்ததும் அந்த பெண் தண்டவாளத்தில் படுத்து விடுகிறார். 

ரயில் அருகில் வருவதை பார்த்தும், அங்கிருந்து அசையாமல் அப்படியே படுத்திருக்கிறார். பின் வேகமாக வந்த ரயில் அந்த பெண்ணை கடந்து செல்கிறது. ரயில் சென்றதும் அந்த பெண் எவ்வித காயமும் இன்றி தண்டவாளத்தில் இருந்து எழுந்த பெண் தொலைபேசியில் பேசிக் கொண்டே அங்கிருந்து கிளம்பி சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் மத்திய பட்ஜெட் தாக்கல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
உடற்கல்வி ஆசிரியருடன் சௌமியா.! வீட்டிற்கு வந்தும் எந்நேரமும் ஓயாமல்! விஷயம் தெரிந்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!