கோடை வெப்பம் எதிரொலி... பள்ளி நேரங்களை மாற்றியமைக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!!

Published : May 11, 2022, 08:38 PM ISTUpdated : May 11, 2022, 09:05 PM IST
கோடை வெப்பம் எதிரொலி... பள்ளி நேரங்களை மாற்றியமைக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!!

சுருக்கம்

கோடை காலத்தில் வெப்பம் அதிகரித்து வருவதால், பள்ளி நேரங்களை மாற்றி அமைக்க மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளதோடு, நாடு முழுவதும் பள்ளி வகுப்புகளை காலை 7 மணிக்கு தொடங்கி நண்பகலுக்குள் முடிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. 

கோடை காலத்தில் வெப்பம் அதிகரித்து வருவதால், பள்ளி நேரங்களை மாற்றி அமைக்க மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளதோடு, நாடு முழுவதும் பள்ளி வகுப்புகளை காலை 7 மணிக்கு தொடங்கி நண்பகலுக்குள் முடிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மண்டையை பிளக்க ஆரம்பித்துள்ளது. ராளமான மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி செல்ல ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக, வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 105.4 வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதைதவிர, மதுரை, நெல்லை, ஈரோடு, திருச்சி, கரூர், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர் மாவட்டங்களிலும் வெயில் சதமடித்துள்ளது. இதன் காரணமாக குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த மே.4 ஆம் தேதி தொடங்கியது. இந்த கத்திரி வெயில் 28 ஆம் தேதி வரை நீடிக்க உள்ள நிலையில், 24 ஆம் தேதி வரை அனல் காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் வெப்பம் அதிகரித்து வருவதால், பள்ளி நேரங்களை மாற்றி அமைக்க மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் பள்ளி வகுப்புகளை காலை 7 மணிக்கு தொடங்கி நண்பகலுக்குள் முடிக்கலாம் என்றும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பள்ளியில் காலையில் நடத்தப்படும் வழிபாட்டை நிழலாக உள்ள இடத்தில் நடத்த வேண்டும். வெயில் அதிகமாக உள்ளதால் வெளி விளையாட்டுகளை காலை நேரத்திலேயே நடத்தி முடிக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. பள்ளி வாகனங்களில் அதிக அளவிற்கு மாணவர்களை ஏற்றக்கூடாது என்றும் அதில் முதலுதவி பெட்டி அவசியம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், முடிந்தளவு தங்கள் குழந்தைகளை பெற்றோர்களே அழைத்து வரலாம் என்று மத்திய அரசு யோதனை தெரிவித்துள்ளது. கடுமையான வெப்பம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பீகாரில் திருப்பதி கோயில்! 1 ரூபாய்க்கு 10.11 ஏக்கர் நிலம் வழங்கிய நிதிஷ் குமார்!
சாவு எப்படியெல்லாம் வரும் பார்த்தீங்களா! நியூயார்கில் இந்திய மாணவி உயிரி**ழப்பு! நடந்தது என்ன?