கோவிலில் உள்ள சிவலிங்கத்தில் கைகளை கழுவிய உ.பி. அமைச்சர்.. வைரல் வீடியோ.. பரபரப்பு சம்பவம்

By Raghupati R  |  First Published Sep 5, 2023, 10:28 AM IST

கோவிலில் உள்ள சிவலிங்கத்தில் கைகளை கழுவும் வீடியோ வெளியானதை அடுத்து உ.பி அமைச்சர் சனாதன தர்மத்தை அவமதித்ததாக காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.


உத்தரபிரதேச மந்திரி சதீஷ் சர்மா திங்களன்று ராம்பூரில் உள்ள லோதேஷ்வர் மகாதேவ் கோவிலில் உள்ள சிவலிங்கத்தில் கைகளை கழுவுவது போன்ற வீடியோ வெளியானது. இதனையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர்களால் கடுமையாக சாடப்பட்டார்.

வீடியோவில், ஒரு சாமியார் சதீஷ் ஷர்மா சிவலிங்கத்தின் 'அர்கா' அல்லது அடித்தளத்தில் கைகளை கழுவ உதவினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ‘சனாதன தர்மம்’ குறித்து இந்திய அணிக்கு எதிராக சூடுபிடித்து இருந்த நிலையில், தற்போது இந்தியா கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளது.

Tap to resize

Latest Videos

மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய். சதீஷ் சர்மா "சனாதன தர்மத்தை அவமானப்படுத்தினார்" என்று கூறினார். காங்கிரஸ் தலைவர் சுரேந்திர ராஜ்புத் கூறுகையில், உ.பி அமைச்சர் சிவபெருமானை அவமதித்ததாகவும், அவர் பதவி விலக வேண்டும் என்றும் கூறினார்.

"சனாதன தர்மத்தின் மீது அக்கறை இல்லாதவர்கள் மட்டுமே இதைச் செய்ய முடியும். பாஜக அமைச்சர் சிவபெருமானை அவமதித்துள்ளார். இந்த மத விரோதச் செயலுக்காக முதல்வர் யோகி ஆதித்யநாத் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என்று அவர் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. செப்டம்பர் 14-க்குள் இதை செய்து முடிங்க..!

click me!