UP International Trade Show 2024: உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் சர்வதேச வர்த்தக்க் கண்காட்சியில் ஜல் சக்தி அமைச்சகத்தின் ஸ்டால் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. ஜல் ஜீவன் மிஷனின் சாதனைகள் ஸ்டாலில் காட்சிப்படுத்தப்படுகின்றன. வருகை தரும் பலரும் அங்கு செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெறும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் மாநில ஜல் சக்தி அமைச்சகத்தின் ஸ்டால் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. ஸ்டாலின் நுழைவாயிலில் குழாயிலிருந்து நீர் வருவது போன்ற வடிவமைப்பு அனைவரையும் கவர்கிறது.
உள்ளூர் இசை கலைஞர்கள் ஜல் ஜீவன் மிஷனின் சாதனைகளை நாட்டுப்புற பாடல்கள் மூலம் பாடி, பார்வையாளர்களின் மனதை கவர்ந்திழுக்கின்றனர். ஜல் ஜீவன் மிஷனின் சாதனையை எளிய வார்த்தைகளில் மக்களுக்கு எடுத்துச் செல்கிறோம் என்று அந்த இசைக் கலைஞர்கள் தெரிவித்தனர்.
undefined
'மோடி-யோகி சொன்னதை செய்து காட்டினார்...' மற்றும் 'மோடி யோகி இணைந்து திட்டமிட்டனர், ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்கினர்' என்பது வரிகள் கொண்ட பாடலை அவர்கள் பாடுகின்றனர். ஸ்டாலுக்கு வரும் ஒவ்வொரு பார்வையாளரும் அமைச்சகத்தின் சாதனைகளைப் பாராட்டுகிறார்கள்.
முன்பு புந்தேல்கண்டில் குடிநீர் பிரச்சனை அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது யோகி அரசு 95 சதவீத வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்குவதை உறுதி செய்துள்ளது. பள்ளிகளில் குடிநீர் வழங்குதல், முதல்வர் வீட்டு வசதித் திட்டம், பசுப் பாதுகாப்பு மையம் போன்ற பிற திட்டங்கள் குறித்தும் ஜல் சக்தி ஸ்டாரில் விரிவாக விளக்கப்படுகிறது.
வர்த்தகக் கண்காட்சியில் கதர் பேஷன் ஷோ! உ.பி. அரசுக்கு மத்திய அமைச்சர் பாராட்டு!!
அணைகள், தடுப்பணைகள் பற்றிய சித்தரிப்புகள்:
நீர்ப்பாசனம் மற்றும் நீர்வளத் துறையின் ஸ்டாலிலும் சனிக்கிழமை பார்வையாளர்கள் கூட்டம் அலைமோதியது. உ.பி.யின் அணைகள், தடுப்பணைகள் மற்றும் கரைகள் பற்றிய தகவல்களைப் மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். ஸ்டாலில் பார்வையாளர்களுக்காக ஒரு டஜன் LED திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் துறையின் சாதனைகள் குறித்து தகவல்கள் காண்பிக்கப்படுகின்றன.
ரிஹந்த் அணை, பம்கோடா தடுப்பணை, நரோரா தடுப்பணை, கிர்ஜா தடுப்பணை, மத்திய கங்கை தடுப்பணை ஆகியவற்றின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தில் உள்ள 132 அணைகள், 20 தடுப்பணைகள், 523 கரைகள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் வெள்ளத்திலிருந்து பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகள் பற்றி பார்வையாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
21 வயதில் 71 லட்சம் கிடைக்கும்! இந்த போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் முதலீடு செய்வது எப்படி?
சரியான இன்சூரன்ஸ் பாலிசியை எடுப்பது எப்படி? ஆயுள் காப்பீடு முதல் வாகனக் காப்பீடு வரை!