Latest Videos

ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம்.. பலி எண்ணிக்கை 134ஆக உயர்வு.. தலைமறைவான போலே பாபா..

By Ramya sFirst Published Jul 3, 2024, 12:06 PM IST
Highlights

ஹத்ராஸ் ஆன்மீக கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலியானோர் எண்ணிக்கை 134 ஆக உயர்ந்துள்ளது. கூட்டத்தை நடத்திய போலே பாபா தலைமறைவான நிலையில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

உத்திரப்பிரதேசம் மாநிலம் ஹாத்ராஸ் மாவட்டத்தின் சிக்கந்தாராவ் தாலுகாவில் உள்ள முகல்கடி கிராமத்தில் நேற்று ஆன்மீக கூட்டம் நடைபெற்றது. போலே பாபா என்று அழைக்கப்படும் சாக்கார் நாராயணன் சாகர் விஷ்வ ஹரி, என்பவர் இந்த கூட்டத்தை நடத்தினார். இந்த ஆன்மீக கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 100க்கு மேற்பட்டோர் உயிரிழந்தத சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த நிலையில் இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 134 ஆக உயர்ந்துள்ளது. 80,000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் பேர் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்று மதியம் 3.00 மணிக்கு கூட்டம் முடிந்த உடன் முதல் நபராக போலே பாபா கிளம்பி உள்ளார். அப்போது பாபாவின் காலில் ஆசீர்வாதம் வாங்க சில முண்டியடித்துள்ளனர். அப்போது தன் சிலர் கீழே விழுந்துள்ளனர். ஆனால் கீழே விருந்தவர்கள் மீது கூட்டத்தினர் மிதித்தபடி முந்தி உள்ளனர். இந்த தொடர்ந்து வந்தவர்களும் கீழே வந்ததால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

பின்னர் கூச்சல் குழப்பத்துடன் கூட்டத்தினர வெளியேறீய போது வாசல்களிலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் சிலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர். இதனால் சில நிமிடங்களிலேயே நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதனிடையே தனக்காக கூடிய பக்தர்களை பற்றி எந்த கவலையும் இல்லாத போலே பாபு சொகுசு வாகனத்தில் கிளம்பி உள்ளார். தனது ஆன்மீக கூட்டத்திற்கு வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பிறகும் அவர் பக்தர்களை பார்க்க அவர் திரும்பி வரவில்லை. மேலும் தலைமறைவான அவர் தனது செல்போனையும் ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டார். போலே பாபாவையும், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிர்வாகத்தினரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள், ஹத்ராஸ், ஏட்டா மாவட்ட அரசு மருத்துவமனைகள், அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் பலரும் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் இல்லாததும் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
 

click me!