
Ration Card E KYC in UP : உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்ப மேளா வெற்றிகரமாக முடிந்துள்ளது. பிப்ரவரி மாதமும் முடிந்து மார்ச் மாதமும் பிறக்க இருக்கிறது. இந்த மார்ச் மாதத்தில் உத்தரப்பிரதேசத்தில் புதுவிதமான விதிமுறைகள் அமல்படுத்தப்பட இருக்கிறது. ஹொலி, ஈத் பண்டிகைக்கு மத்தியில் அரசு வேலையில் இருப்பவர்கள் தங்களது சொதுது விவரங்களை ஆன்லைனில் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டியிருக்கிறது. அப்படி ஆன்லைனில் பதிவேற்றப்படவில்லை என்றால் சம்பளம் தடுத்து நிறுத்தப்படுமாம்.
ஒரே நாடு, ஒரே தேர்தல்: சுதந்திர இந்தியாவில் மிகப்பெரிய நிர்வாக சீர்திருத்தம்
உபியில் ரேஷன் கார்டுக்கு E-KYC கட்டாயம்:
ஏழை எளிய மக்களுக்கும், தேவைப்படுபவர்களுக்கும் அரசு இலவசமாக ரேஷன் கொடுத்து வருகிறது. உபியில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு E-KYC கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முதலில் டிசம்பர் 31, 2024 வரையில் டைம் கொடுக்கப்பட்டிருந்தது.
அதன் பிறகு பிப்ரவரி 2025 வரைக்கும் டைம் கொடுத்தாங்க. இப்ப பிப்ரவரி மாதமும் முடிந்து நாளை மார்ச் 1ஆம் தேதியும் பிறக்க போகிறது. ஆனால் அரசு இனும் காலம் நீட்டிப்பு செய்யவிலை. ஆதலால் ஏற்கனவே அறிவித்தபடி ஈ கேஒய்சி செய்யாதவர்களுக்கு ரேஷன் கிடைக்காமல் போகலாம் என்று தெரிகிறது.
பிறப்புச் சான்றிதழுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் உள்ளே!
உ.பி. அரசு ஊழியர்களுக்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன!
உத்தரபிரதேச அரசு, அரசு ஊழியர்கள் தங்கள் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்களை மனவ் சம்படா போர்ட்டலில் வழங்குமாறு உத்தரவிட்டிருந்தது. இதற்கான கடைசி தேதி 2025 ஜனவரி 31 என நிர்ணயிக்கப்பட்டது. இந்தக் காலக்கெடுவிற்குள் சொத்து விவரங்களை வழங்காத ஊழியர்களின் சம்பளம் நிறுத்தி வைக்கப்படலாம்.
உத்தரப்பிரதேசத்தில் நான்கு லட்சம் ஊழியர்களுக்கு சம்பள நெருக்கடி:
பணியாளர் துறை விரைவில் இது குறித்து இறுதி முடிவை எடுக்கக்கூடும். மாநிலத்தில் மொத்தம் 8.32 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர், அவர்களில் 4.33 லட்சம் ஊழியர்கள் மட்டுமே தங்கள் சொத்துக்களின் விவரங்களைப் பதிவு செய்துள்ளனர். அதாவது இப்போதும் சுமார் 4 லட்சம் ஊழியர்கள் இந்த விதியைப் பின்பற்றவில்லை. அரசு வட்டாரங்களின்படி, குறிப்பிட்ட காலத்திற்குள் தங்கள் சொத்துக்களின் விவரங்களை வழங்காத ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம்.
இந்தியாவில் NGO என்றால் என்ன? சட்டப்படி எவ்வாறு பதிவு செய்வது - முழு வழிகாட்டி!!
மார்ச் 2025 இல் விதிகளில் ஏற்படும் மாற்றங்கள் அரசு ஊழியர்களின் சம்பளம் முதல் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் வரை அனைத்தையும் பாதிக்கலாம். இந்த விஷயங்களில் அரசு விரைவில் இறுதி முடிவு எடுக்கும். இந்த விதிகளால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், எந்தவொரு சிரமத்தையும் தவிர்க்க தேவையான செயல்முறையை விரைவில் முடிக்கவும்.