உத்தரகாண்ட் சமோலியில் பனிச்சரிவு: 50க்கும் மேற்பட்டோரின் நிலை என்ன?

Published : Feb 28, 2025, 02:19 PM ISTUpdated : Feb 28, 2025, 02:23 PM IST
உத்தரகாண்ட் சமோலியில் பனிச்சரிவு: 50க்கும் மேற்பட்டோரின் நிலை என்ன?

சுருக்கம்

உத்தரகாண்டின் சமோலியில் உள்ள மனா கிராமத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் குறைந்தது 57 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

உத்தரகாண்டின் சமோலியில் உள்ள மனா கிராமத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 57 தொழிலாளர்கள் வரை புதைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மீட்பு முயற்சிகள் நடந்து வருகின்றன. தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF), மாநில பேரிடர் மீட்பு படை (SDRF), மாவட்ட நிர்வாகம், இந்திய-திபெத்திய எல்லை போலீஸ் (ITBP) மற்றும் எல்லை சாலைகள் அமைப்பு (BRO) குழுக்கள் சம்பவ இடத்தில் உள்ளன.

இந்த தொழிலாளர்களில், 10 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, மனாவில் உள்ள இராணுவ முகாமிற்கு ஆபத்தான நிலையில் அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) பிப்ரவரி 28 ஆம் தேதி நள்ளிரவு வரை உத்தரகாண்டில் மிக கனமழை (20 செ.மீ வரை) பெய்யும் என்று கணித்துள்ளது.

கோவாவில் இட்லி சாம்பார் விற்றால் வெளிநாட்டவர்கள் எப்படி வருவார்கள்? பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

காவல்துறை தலைமையக செய்தித் தொடர்பாளர் ஐ.ஜி. நிலேஷ் ஆனந்த் பர்னே ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய போது, "மானாவின் எல்லைப் பகுதியில் உள்ள எல்லை சாலைகள் அமைப்பு முகாம் அருகே ஒரு பெரிய பனிச்சரிவு ஏற்பட்டது, அதில் சாலை கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த 57 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். இந்த தொழிலாளர்களில், 10 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, மனாவில் உள்ள இராணுவ முகாமிற்கு ஆபத்தான நிலையில் அனுப்பப்பட்டுள்ளனர்." என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், BRO (எல்லை சாலைகள் அமைப்பு) நிர்வாக பொறியாளர் சி.ஆர்.மீனா கூறுகையில், சம்பவ இடத்தில் 57 தொழிலாளர்கள் இருந்தனர். மூன்று முதல் நான்கு ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன, ஆனால் பலத்த பனிப்பொழிவு காரணமாக, மீட்புக் குழு அங்கு செல்வதில் சிரமம் உள்ளது.” என்று தெரிவித்தார்.

நேபாளில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு; இந்தியாவிலும் உணரப்பட்ட அதிர்வு!

வானிலை நிலைமைகள் குறித்து, டி.எம். சந்தீப் திவாரி கூறுகையில், "வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மாவட்டத்தில் கனமழை மற்றும் பனிப்பொழிவு ஏற்படும் என்பதைக் குறிக்கிறது. பத்ரிநாத் தாம், ஹனுமன்சட்டி, மலாரி பகுதி மற்றும் ஆலி போன்ற உயரமான பகுதிகளில் பலத்த பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது, மற்ற தாலுகாக்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது..." என்று தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!