உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் கெரி அருகே நிகாசென் காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த பதின்வயதைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் தூக்கில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டனர்.
உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் கெரி அருகே நிகாசென் காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த பதின்வயதைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் தூக்கில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக போலீஸார் கொலை மற்றும் பலாத்காரம் ஆகிய பிரிவின் கீழ் 6 பேரைக் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் முதல்முறை! டெங்கு காய்ச்சல் தடுப்பூசியின் முதல் கிளினிக்கல் பரிசோதனைக்கு அனுமதி
கடந்த ஆண்டு ஹாத்ராஸில் நடந்த பாலியல் பலாத்காரம் கொலைக்கு அடுத்தார்போல், ரத்தத்தை உறையவைக்கும் வகையிகள் சகோதரிகள் இருவரும் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
நிகாசன் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியிலிருந்து ஒரு கி.மீ தொலைவில் இந்த சகோதரிகள் வீடு அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இருவரும் கரும்புத் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இந்த இரு பெண்களின் தாய் கூறுகையில் “ எங்கள் கிராமத்துக்கு அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் என் மகளை கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர்”எனக் குற்றம்சாட்டினார்.
இரட்டை சகோதரிகள் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்யக் கோரி நிகாசன் கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீஸார் அங்கு வந்து சமாதானம் பேசி குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என உறுதியளித்தபின் கலைந்து சென்றனர்
எல்லாத்தையும் வாங்கி,வாக்காளர்களை மொத்த வியாபாரி கிண்டல் செய்வார் அப்போ பாருங்க!ப.சிதம்பரம் தாக்கு
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் சுமன், டிஎஸ்பி அருண் குமார் சிங் சம்பவ இடத்துக்கு விசாரணை நடத்திச் சென்றனர். இதையடுத்து, அந்த கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த இரட்டை சகோதர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் சுமன் அளித்த பேட்டியில் “ தலித் இரட்டை சகோதரிகள் மரத்தில் தூக்கில் பிணமாகத் தொங்கியது தொடர்பாக சந்தேகப்படும் 6 பேரைக் கைது செய்துள்ளோம். இவர்கள் சோட்டு, ஜூனைத், சோஹைல், ஹபிசுல், கரிமூதீன், ஆரிப் ஆகியோர் என அடையாளம் தெரிந்தது. இவர்கள் மீது பாலியல் பலாத்காரம் , கொலை,ஐபிசி 323, ஐபிசி452, போக்ஸோ சட்டம் ஆகிய பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரட்டை சகோதர்களின் உடற்கூறு அறிக்கை கிடைத்தபின் பலாத்காரம் செய்யப்பட்டார்களா, எப்படி கொலை செய்யப்பட்டார்கள் என்பது தெரியவரும். இந்த விசாரணையில் ஜூனைத்துக்கு மட்டும் அந்தப் பெண்களைத் தெரிந்துள்ளது.
தமிழுக்கு போட்டி இந்தி மொழி அல்ல: பிராந்திய மொழிகளுக்கு நட்பு: அமித் ஷா பேச்சு
அந்த பெண்களை மற்றவர்களுக்கு அறிமுகம்செய்துவைத்து, அவர்களை கரும்புத் தோட்டத்துக்குள் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.
தங்களை பலாத்காரம் செய்தவர்களைத் திருமணம் செய்ய அந்த பெண்கள் மறுத்தததைத் தொடர்ந்து ஜூனைத், ஹபிசுல், சோஹைல் ஆகிய 3 பேரும் சேர்ந்து அவர்களை கழுத்தை நெரித்து கொலை செய்து ஆதாரங்களை அழிக்க முயன்றனர் ” எனத் தெரிவித்தார்