chidambaram:எல்லாத்தையும் வாங்கி,வாக்காளர்களை மொத்த வியாபாரி கிண்டல் செய்வார் அப்போ பாருங்க!ப.சிதம்பரம் தாக்கு

By Pothy RajFirst Published Sep 15, 2022, 9:42 AM IST
Highlights

2014ம்ஆண்டிலிருந்து இந்தியச் சந்தையில் “மொத்த வியாபாரி” (பாஜக)ஒருவர் இருக்கிறார். அவர், ஒருநாள் நாட்டில் உள்ள அனைத்து எம்எல்ஏக்களையும் விலைக்கு வாங்கி வாக்காளர்களை கிண்டல் செய்யப் போகிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரம் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

2014ம்ஆண்டிலிருந்து இந்தியச் சந்தையில் “மொத்த வியாபாரி” (பாஜக)ஒருவர் இருக்கிறார். அவர், ஒருநாள் நாட்டில் உள்ள அனைத்து எம்எல்ஏக்களையும் விலைக்கு வாங்கி வாக்காளர்களை கிண்டல் செய்யப் போகிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரம் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கோவாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் பாஜகவில் நேற்று சேர்ந்ததற்கு கண்டனம் தெரிவித்து ப.சிதம்பரம் இந்த கருத்தை பதிவு செய்துள்ளார்.

பஞ்சாபில் BMW வாகன உதிரிபாக ஆலை அமைக்க ஒப்புக்கொண்டோமா? இல்லவே இல்லை… மறுக்கும் BMW குழுமம்!!

கோவாவில் உள்ள காங்கிரஸ் கட்சியில் 11 எம்எல்ஏக்கள் இருந்தனர். இதில் 8 பேர் பாஜகவில் நேற்று இணைந்தனர்.இதில் முன்னாள் முதல்வர் திகம்பர் காமத்தும் பாஜகவில் சேர்ந்தார். இது எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு பெருத்த பின்னடைவாக அமைந்தது, கோவாவில் எதிர்க்கட்சியே இல்லாத சூழல் இருக்கிறது

ஆனால், காங்கிரஸ் கட்சியில் உள்ள கார்லோஸ் பெராரியா, யூரி அலிமா, அல்டோன் டி கோஸ்டா ஆகியோர் மட்டும் பாஜகவில் சேரவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை விலைகொடுத்து வாங்கி பாஜக செய்யும் செயல்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டித்துள்ளார்.

ஆசிரியரை கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்கும் சிறுவன்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ கோவா அரசியலின் சாபம், எம்எல்ஏக்கள் விலைக்கு வாங்கப்பட்டது. 2014ம் ஆண்டிலிருந்து, இந்தியச் சந்தையில் ஒரு “மொத்த வியாபாரி”இருக்கிறார். ஒருநாள், அந்த “மொத்த வியாபாரி” நாட்டில் உள்ள அனைத்து எம்எல்ஏக்களையும் விலைக்கு வாங்கி, ஜனநாயகத்தையும், வாக்காளர்களையும் கிண்டல் செய்வார். அப்போது வாக்காளர்களால் என்ன செய்ய முடியும்.

கோவாவில் உள்ள மக்கள் பாஜகவிடம் விலைபோன எம்எல்ஏக்களுக்க எதிராக போராடாதவரை இந்த சாபத்தை நாம் அழிக்க முடியாது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த சாபம் நீடிக்கிறது.

கார்லோஸ் பெராரியா, யூரி அலிமா, அல்டோன் டி கோஸ்டா ஆகியோர் உயர்ந்து நிற்கிறார்கள், எம்எல்ஏக்களுக்கான தரத்தோடு பெருமையாக இருக்கிறது. கட்சிக்கும், கடவுளுக்கும், வாக்காளர்களுக்கும், கொள்கைக்கும் உண்மையாக இருக்கும் இந்த 3 எம்எல்ஏக்களையும் நான் வணங்குகிறேன். அவர்களை கடவுளும், கோவா மக்களும் ஆசிர்வதிக்கட்டும்”எ னத் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு சிரமமில்லாமல் இந்தியப் பகுதியை தாரை வார்த்த பிரதமர் மோடி: ராகுல் காந்தி விளாசல்

கோவாவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் வேட்பாளர்கள் கோயில், தேவாலயம், மசூதிகளில் சத்தியப்பிரமாணம் எடுத்து கட்சிதாவமாட்டோம் என்று உறுதி செய்தனர். ஆனால், காங்கிரஸின் 8எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர்ந்துவிட்டனர். கடந்த 2010ம் ஆண்டிலும் இதேபோல காங்கிரஸின் 10எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர்ந்தனர்.

click me!