இந்தியாவில் முதல்முறையாக டெங்கு வைரஸ் காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் முதல்கட்ட கிளிக்கல் பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக டெங்கு வைரஸ் காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் முதல்கட்ட கிளிக்கல் பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய சுகாதார நிறுவனத்துடன் இணைந்து, இந்த தடுப்பூசியை இந்தியன் இம்யூனாலஜிக்கல் லிமிடட் நிறுவனம் தயாரித்துள்ளது.
பூச்சிகள் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தும் தேசிய மையம் சார்பில் வெளியிட்டப்பட்ட அறிக்கையில், “ கடந்த ஆண்டு இந்தியாவில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 245பேர் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டதில் 346 பேர் உயிரிழந்தனர்.
எல்லாத்தையும் வாங்கி,வாக்காளர்களை மொத்த வியாபாரி கிண்டல் செய்வார் அப்போ பாருங்க!ப.சிதம்பரம் தாக்கு
அதிலும் மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவக்கூடும். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் நவம்பர் வரையிலான காலம் டெங்கு வைரஸ் பரவலுக்கு உகந்ததாகும். பெரும்பாலும் வீட்டின் ஓரங்களில் தண்ணீர் தேங்கியிருத்தல், சுகாதாரமில்லாமல் இருக்கும் இடங்களில் ஏடிஎஸ் கொசுக்கள் உருவாகி டெங்கு காய்ச்சலை பரப்பும். மழைக்காலத்துக்குப்பின் இந்த காய்ச்சல் உச்சத்தை அடையும்.
ஏடிஸ் பெண் கொசுக்கள் ஒருவரைக் கடித்துவிட்டு மற்றொருவர் உடலில் அமர்ந்து கடிக்கும்போது, டெங்கு காய்ச்சலைப்பரப்புகிறது. இந்த கொசு பகல்நேரத்தில்தான் முட்டையிட்டு குஞ்சுபொறிக்கும். ஏறக்குறைய 400 மீட்டர் வரை உயரம் வரை பறக்கும் திறனுடையது. காலநிலை 16 டிகிரிக்கும்கீழ் குறையும்பட்சத்தில் டெங்கு கொசுக்களால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.
ஆசிரியரை கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்கும் சிறுவன்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
இந்நிலையில் டெங்கு காய்ச்சலுக்காக கண்டுபிடிக்கப்பட்டஇந்த தடுப்பூசியின் கிளினிக்கல் பரிசோதனை முடிந்து அடுத்த 2 ஆண்டுகளில் தடுப்பூசி அறிமுகமாகும். இதன் மூலம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும், உயிரிழப்பும் குறையும்.
அமெரிக்காவில் 6 முதல் 16 வயதுள்ள குழந்தைகளுக்கு டெங்கு தடுப்பூசி பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் இருக்கும் கொசுக்களால் பரவும் நோய்க்கு ஏற்ப இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால், டெங்கு காய்ச்சல் நாட்டுக்கு நாடு வேறுபாடுகிறது, வைரஸின் உருமாற்றமும் வேறுபடுகிறது. அதிலும் இந்தியாவில் தொடர்ந்து டெங்கு வைரஸ் உருமாற்றம் பெறுவதால் அந்தத் தடுப்பூசி பயன்அளிக்காது.
நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியினர் பிரிவில் சேர்க்கும் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்துதான் ஐசிஎம்ஆர் அமைப்பு முறைப்படி டெங்கு தடுப்பூசி தயாரிக்கும் சந்தையில் நுழைந்துள்ளது. ஏற்கெனவேஇந்தியாவில் பனாகா பயோடெக் லிமிடெட், சனோபி இந்தியா பிரைவேட் லிமிட் ஆகியநிறுவனங்கள் கிளினிக்கல் பரிசோதனை செய்ய அனுமதி பெற்றுள்ளன.