விரைவில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டை இணைக்கப்படும் - மத்திய அரசு தகவல்...!!!

First Published Aug 9, 2017, 5:14 PM IST
Highlights
Union Minister Ravi Shankar Prasad said the Election Commission will announce soon.


ஆதார் எண்ணுடன், வாக்காளர் அடையாள அட்டை விவில் இணைக்கப்பட உள்ளதாகவும் இது குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

மத்திய அரசு, ஆதார் எண்ணுடன் பான் எண், வங்கி கணக்கு, ரேஷன் கார்டு ஆகியவற்றுடன் இணைத்து வருகிறது.  வருமான வரி தாக்கலுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விரைவில் வாக்காளர் அடையாள அட்டையும், ஆதார் எண்ணுடன் இணைக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்து பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், விரைவில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும், ஆதார் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருவதால் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு உரிய நேரத்தில் ஆதார் எண் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு குறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

click me!