உண்மைகளை மாற்ற முடியாது: ஜெய்ராம் ரமேஷுக்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலடி!

Published : Aug 29, 2023, 09:32 PM IST
உண்மைகளை மாற்ற முடியாது: ஜெய்ராம் ரமேஷுக்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலடி!

சுருக்கம்

உண்மைகளை மாற்ற முடியாது என காங்கிரஸ் தலைவர் ரமேஷுக்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலடி கொடுத்துள்ளார்

கர்நாடகாவில் கடந்த வாரம் பிரதமர் மோடி மேற்கொண்ட பயணத்தின் போது ஏற்பட்ட சர்ச்சை குறித்து, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்றை மேற்கோள் காட்டி காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், உண்மைகளை மாற்ற முடியாது என தெரிவித்துள்ளார்.

நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 லேண்டரை  வெற்றிகரமாக தரையிறக்கிய இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்த பிரதமர் மோடி கடந்த வாரம் கர்நாடக மாநிலம் பெங்களூரு சென்றார். அப்போது மரபுப்படி பிரதமரை வரவேற்பதற்காக அம்மாநில முதல்வர் சித்தராமையாவோ, துணை முதல்வர் டி.கே.சிவகுமாரோ விமான நிலையம் செல்லவில்லை.

இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சி, பெங்களூரு வந்த பிரதமரை விமான நிலையம் சென்று வரவேற்க தடை விதிக்கப்பட்டது. இது மரபு மீறல் என குற்றம்சாட்டியது. பிரதமருக்கு முன்பாக இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டியதற்காக கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் மீது பிரதமர் எரிச்சலடைந்துள்ளார். அதனால் மரபுகள் மீறப்பட்டுள்ளாதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

சீனா மேப்பில் இந்தியப் பகுதியா? வெளுத்து வாங்கிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

இருப்பினும், “நானோ அல்லது முதல்வரோ எந்த நேரத்திலும் சென்று பிரதமரை வரவேற்க தயாராக இருந்தோம். ஆனால், பிரதமரின் அலுவலகத்தில் இருந்து எங்களை வர வேண்டாம் என அதிகாரபூர்வ தகவல் வந்ததால், அதனை மதிக்க விரும்பினோம். வேறெந்த அரசியலும் இதில் இல்லை.” என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், விஞ்ஞானிகளை சந்தித்துவிட்டு உடனடியாக செல்ல வேண்டியிருப்பதால் முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஆளுநரிடம் விமான நிலையத்திற்கு வரவேற்க வந்து சிரமப்பட வேண்டாம் என்பதால் மரபுகளைத் தவிர்த்ததாக பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த நிலையில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்றை மேற்கோள் காட்டி காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 1983 ஆம் ஆண்டு SLV-3D ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்ட பிறகு, அப்போதைய ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ராமராவ், ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ மையத்திற்கு அழைக்கப்பட்டதை அவர் நினைவு கூர்ந்துள்ளார். அரசியல் எதிரிகளாக இருந்தாலும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கு வருமாறு என்டிஆருக்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அழைப்பு விடுத்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

இதற்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், இந்திரா காந்தி தனது அரசியல் எதிரிகள் சிறையில் அடைக்க எமர்ஜென்சியை பயன்படுத்தியது போன்ற சிறிய பிரச்சினைகளை ஜெய்ராம் ரமேஷ் மறந்து விட்டார். மேலும், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியை, சாய் வாலா என்றும், ஒசாமா பின்லேடன் என்றும், பயங்கரவாதி என்றும் கூறி காங்கிரஸ் கட்சி தனது கோபத்தை வெளிப்படுத்துகிறது. மறுபெயரிடுவதன் மூலம் உண்மைகளை மாற்ற முடியாது என்றும் ராஜீவ் சந்திரசேகர் சாடியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!