Pongal festival : தமிழில் பொங்கல் வாழ்த்து... உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட... சர்ப்ரைஸ் ட்வீட் !!

By Raghupati RFirst Published Jan 14, 2022, 9:53 AM IST
Highlights

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி தமிழில் வாழ்த்து கூறியுள்ளார்.

எல்லாத்தொழிலுக்கும் மேலான தொழில் வேளாண்மைத்தொழில். இந்த தொழிலை செய்யும் விவசாயி தன் உழைப்பின் மூலம், தான் சிந்தும் வியர்வை மூலம், சேற்றில் கால் பதிப்பதன் மூலம் உலகுக்கே உணவளிக்கிறான். அவனுக்கு துணையாக நிற்பது சூரியனும், கால்நடைகளும் என்றால் மிகையாகாது. அந்தவகையில்தான் நிலத்தை உழுது, நாற்று நட்டு, நீர் பாய்ச்சி, உரமிட்டு கண்ணுங்கருத்துமாக பராமரித்து, செங்கதிர் விளைந்தவுடன் அதை அறுவடை செய்கிறான். 

இயற்கை அவனுக்கு துணைக்கரம் நீட்டினால்தான் நல்ல மகசூலை காணமுடியும்.  அந்த மகசூலினால் மனம் மகிழும் விவசாயிகள் மட்டுமல்லாமல், அவன் விளைவித்த நெல் உள்ளிட்ட உணவுப்பொருட்களை உண்டு மகிழ்ந்த தமிழ்க்குலம் முழுவதுமே களிப்புடன் கொண்டாடும்நாள் பொங்கல்.  தமிழர் திருநாளாம் தை முதல் நாளான இன்று உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையை வெகு கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

 

அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். இந்த மங்களகரமான திருநாள் அனைவரது வாழ்விலும் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கட்டும். pic.twitter.com/UjeNVBXsEH

— Amit Shah (@AmitShah)

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், 'அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.  இந்த மங்களகரமான திருநாள் அனைவரது வாழ்விலும் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கட்டும்" என்று ட்விட்டரில் தமிழில் பதிவிட்டு பொங்கல் வாழ்த்தினை கூறி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

click me!