ரயில்வே ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை: மத்திய அரசு ஹேப்பி நியூஸ்!

By Manikanda Prabu  |  First Published Oct 18, 2023, 5:38 PM IST

ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகையாக ரூ.1968.87 கோடி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது


பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2022-23 ஆம் நிதியாண்டிற்கான 78 நாட்கள் ஊதியத்திற்கு சமமான உற்பத்தித்தியுடன் கூடிய ஊக்கத்தொகையை தண்டவாளப் பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்டுகள், ரயில் மேலாளர்கள், நிலைய மேலாளர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், பாயிண்ட்ஸ்மேன், அமைச்சகப் பணியாளர்கள் மற்றும் பிற குழு 'சி' பிரிவு ஊழியர்களுக்கு (ஆர்.பி.எஃப்/ ஆர்.பி.எஸ்.எஃப் பணியாளர்கள் நீங்கலாக) வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே ஊழியர்களின் இந்தச் சிறந்த செயல்திறனை அங்கீகரிக்கும் வகையில் 11,07,346 ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.1968.87 கோடியை உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகையாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Tap to resize

Latest Videos

செமிகண்டக்டர், ஏஐ, குவாண்டம் கம்ப்யூட்டிங்: இந்திய அரசுடன் ஐபிஎம் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

2022-2023-ம் ஆண்டில் ரயில்வேயின் செயல்திறன் மிகவும் சிறப்பாக இருந்தது. ரயில்வே 1509 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றிச் சென்றது. சுமார் 6.5 பில்லியன் பயணிகளை அது ஏற்றிச் சென்றது. ரயில்வே ஊழியர்களின் செயல்திறனை மேலும் மேம்படுத்தும் விதமாக உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதேபோல், விலைவாசி உயர்வை ஈடுகட்டும் வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (டிஏ) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணத்தின் (டிஆர்) கூடுதல் தவணையை 01.07.2023 முதல் வழங்கவும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உயர்வு 7ஆவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டது. அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் மூலம்  அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.12,857 கோடி செலவாகும். இதன் மூலம் 48.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

click me!