Budget 2023: ஊழலற்ற அரசு! ஜனநாயகம் , சமூக நீதிக்கு ஊழல் மிகப்பெரிய எதிரி:ஜனாதிபதி திரெளபதி முர்மு உறுதி

By Pothy Raj  |  First Published Jan 31, 2023, 1:00 PM IST

கடந்த கால பெருமையுடன் இணைந்து, நவீனத்துவத்தின் ஒவ்வொரு பொன்னான அத்தியாயத்தையும் உள்ளடக்கிய வளர்ந்த இந்தியாவை அடுத்த 25 ஆண்டுகளில் உருவாக்க மக்கள் தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி திரெளபதி முர்மு வலியுறுத்தினார்.


கடந்த கால பெருமையுடன் இணைந்து, நவீனத்துவத்தின் ஒவ்வொரு பொன்னான அத்தியாயத்தையும் உள்ளடக்கிய வளர்ந்த இந்தியாவை அடுத்த 25 ஆண்டுகளில் உருவாக்க மக்கள் தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி திரெளபதி முர்மு வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. இன்று பொருளாதார ஆய்வறி்க்கையும், நாளை(பிப்ரவரி1)  பொதுபட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் முன் இருஅவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுவது மரபாகும். அந்த வகையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று நாடாளுமன்றத்தின் மைய அவையில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். குடியரசுத் தலைவராக பதவி ஏற்றபின் திரெளபதி முர்மு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதுஇதுதான் முதல்முறையாகும்.

அச்சமில்லாத,நிலையான அரசு ஆட்சியில் இருக்கிறது : குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பெருமிதம்

நாடாளுமன்றத்துக்கு வந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றியதாவது:

இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்தநிலையில், அடுத்த 25 ஆண்டுகள் அமிர்தகாலமாகும். இந்த 25 ஆண்டுகளில் மக்கள் அனைவரும் சேர்ந்து உழைத்து, வளர்ந்த இந்தியாவாக, தன்னிறைவு உடைய இந்தியாவாக, மனிதநேய கடமைகளை நிறைவேற்றும் இந்தியாவாக உயர்த்த வேண்டும்.

இந்தியாவில் ஏழ்மையை ஒழித்து, நடுத்தரக் குடும்பத்தினர் செழிப்பாக வாழ வேண்டும். இளைஞர்களும் பெண்களும் தேசத்துக்கு வழிகாட்ட முன்னணியில் வர வேண்டும். 

பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் நாட்டில் ஏராளமான நேர்மறையான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மிகப்பெரிய மாற்றம் என்னவெனில், ஒவ்வொரு இந்தியருக்கும் தன்னம்பிக்கை அதிகரி்துள்ளது. இந்தியாவை உலக நாடுகள் வேறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்கின்றன

இந்தியா தன்னுடைய பிரச்சினைகளைத் தீர்க்க மற்ற நாடுகளைச் சார்ந்திருந்த காலம் கடந்து, உலகின் பிரச்சினைகளைத் தீர்க்கிறது. பல பத்தாண்டுகளாக மக்களுக்கு அடிப்படை வசதிகள், இல்லாமல் இருந்தன.இப்போது சமூகம் நீண்டகாலமாக எதிர்பார்க்கும் நவீன உள்கட்டமைப்புகள் நாடு முழுவதும் கட்டப்பட்டு வருகின்றன. டிஜிட்டல் செயல்முறை பரவலாக்கப்பட்டு,மோடியின் ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது.

15 ஆண்டுகள் பழமையான 9 லட்சம் வாகனங்களுக்குத் தடை - நிதின் கட்கரி அறிவிப்பு

11 கோடி குடும்பங்களுக்கு குழாய்மூலம் குடிநீர் சப்ளை ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. ஏழைக் குடும்பங்கள் இதன் மூலம் பலன் அடைகிறார்கள். 
இந்த அரசு சமூகத்தில் ஒவ்வொரு பிரிவினருக்காக எந்தவிதமான பாகுபாடு இன்றி செயல்படுகிறது.கடந்த சில ஆண்டுகளாக அரசின் முயற்சியால், பல அடிப்படை வசதிகள் 100 சதவீதம் மக்களுக்கு கிடைத்து இலக்கு அடைந்துள்ளது.

உலகில் எந்தெந்த நாடுகளில் அரசியல்நிலையற்றதன்மை நிலவுகிறதோ அங்கு மிகப்பெரிய அளவில் பிரச்சினைகள் சூழ்ந்திருக்கும். தேசத்தின் நலனுக்காக அரசு எடுத்த முடிவுகளால், மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியா சிறந்த இடத்தில் இருக்கிறது.

100 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய நெருக்கடிக்கு எதிராகவும், அதற்குப் பிறகு ஏற்பட்ட சூழ்நிலையைச் சமாளிப்பதிலும் நிலையான மற்றும் உறுதியான அரசாங்கத்தின் பலன் கிடைத்துவருகிறது. 
முழுமையான வெளிப்படைத்தன்மையுடன், கோடிக்கணக்கான மக்களுக்கு ரூ.27 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் அறிக்கையின்படி, இந்தியாவின் சில திட்டங்கள், செயல்முறைகளால், கோடிக்கணக்காண கொரோனா காலத்தில் ஏழ்மை நிலைக்குள் செல்வதைத் தடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளது

பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஆசைகளை எழுப்பியுள்ளது. இப்போது அடிப்படை வசதிகள் அவர்களைச் சென்றடைவதால், இந்த மக்கள் புதிய கனவுகளை அவர்களால் காண முடிகிறது.

தனியார் டிவி சேனல்களில் 30 நிமிடம் பொதுநல நிகழ்ச்சி: மத்திய அரசு

ஜனநாயகம் மற்றும் சமூக நீதிக்கு ஊழல் மிகப்பெரிய எதிரி என்பதில் எனது அரசு தெளிவான கருத்தை கொண்டுள்ளது. பொருளாதார குற்றங்கள் செய்து வெளிநாடுகளுக்குத் தப்பியவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யவும், அவர்களை தண்டிக்கவும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏழைகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணவும், அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் எனது அரசு செயல்பட்டு வருகிறது

இவ்வாறு திரெளபதி முர்மு தெரிவித்தார்
 

click me!