ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இந்தியா வந்தடைந்துள்ளார்
ஜி20 தலைமையை இந்தியா ஏற்றுள்ளது. இந்தியா தலைமையின் கீழ் ஜி20 உச்சி மாநாட்டின் முதன்மை அமர்வு கூட்டம் தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 9,10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதனால், டெல்லி விழாக் கோலம் பூண்டுள்ளது. ஜி20 மாநட்டையொட்டி, பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் என டெல்லி முழுவதும் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.
டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டுக்கு உலகம் முழுவதும் இருந்து ஜி20 தலைவர்கள், பிரதிநிதிகள் டெல்லி வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இந்திய அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.
ஜி20 உச்சி மாநாடு.. டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு.. எதற்கெல்லாம் தடை.? முழு விபரம் இதோ !!
அந்த வகையில், ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இந்தியா வந்தடைந்துள்ளார். தனது மனைவியுடன் டெல்லி வந்த அவரை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் அஷ்வினி சௌவ்பே வரவேற்றார். இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், டெல்லி ஷாங்கிரிலா ஹோட்டலில் தங்கவுள்ளார்.
அதேபோல், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இன்று டெல்லி வரவுள்ளார். பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகிய இரு தலைவர்களும் இன்று இரு தரப்பு பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளனர்.