தந்தையின் கோட்டையை தக்க வைத்தார் சாண்டி உம்மன்: புதுப்பள்ளியில் காங்கிரஸ் அமோக வெற்றி!

By Manikanda Prabu  |  First Published Sep 8, 2023, 1:49 PM IST

புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சாண்டி உம்மன் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது


கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் பெங்களூருவில் கடந்த மாதம் 18ஆம் தேதி காலமானார். இதையடுத்து, அவரது புதுப்பள்ளி தொகுதிக்கு கடந்த 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 50 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் காங்கிரஸ் மூத்த தலைவரான மறைந்த உம்மன் சாண்டி.

உம்மன் சாண்டியின் கோட்டையான புதுப்பள்ளி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற பாஜக, காங்கிரஸ், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது. காங்கிரஸ் சார்பில் உம்மான் சாண்டியின் மகனான சாண்டி உம்மன், பாஜக சார்பில் லிஜின் லால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கேஜ் தாமஸ் ஆகியோர் வேட்பாளர்களாக களம் கண்டனர்.

Tap to resize

Latest Videos

இடைத்தேர்தல் முடிவுகள்: புதுப்பள்ளியில் காங்கிரஸ் முன்னிலை!

இந்த நிலையில், புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்தன. தொடக்கம் முதலே, சாண்டி உம்மன் முன்னிலை வகித்து வந்த நிலையில், அவர் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கேஜ் தாமஸை விட, 36,454 வாக்குகள் அதிகம் பெற்று சாண்டி உம்மன் வெற்றி பெற்றுள்ளார்.

click me!