Gulf Ticket Draw: அமீரகத்தில் புகழ்பெற்ற Raffle Draws-வை தற்போது இந்தியாவிலும் UAEஐ தளமாகக் கொண்டு செயல்படும் Gulf Ticket நிறுவனம்.கொண்டு வந்துள்ளது.
அமீரகத்தை பொறுத்தவரை Draw என்று அழைக்கப்படும் அதிர்ஷ்ட எண்களைக் கொண்டு நடைபெறும் போட்டிகள் பிரபலம். அந்த வகையில் தற்போது இந்தியாவிலும் அதே போன்ற அதிர்ஷ்ட Draw போட்டிகளை நடத்தி வருகிறது புகழ்பெற்ற Gulf Ticket. குறிப்பாக இன்றும், நாளையும் தனது முதல் Drawவை நிகழ்த்தவுள்ளது Gulf Ticket.
Gulf Ticket ஆனது கேமிங் தளத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தத் தயாராக உள்ளது என்றே கூறலாம். ஃபார்ச்சூன் 5 என்ற தலைப்பில் இன்று பிப்ரவரி 23, 2024, மற்றும் Super 6 என்ற தலைப்பில் நாளை பிப்ரவரி 24, 2024 ஆகிய இரண்டும் நாள்களும் இரவு 09:30க்கு இந்த Drawவை நடத்தவுள்ளது. இந்த இரு போட்டிகள் மூலம், இதில் பங்கேற்கும் மக்கள் கோடிக்கணக்கில் பணத்தை வெல்லமுடியும்.
ஃபார்ச்சூன் 5 கேம், இன்று 23, பிப்ரவரி 2024 அன்று இரவு 09:30 IST மணிக்கு துவங்கும். போட்டியாளர்கள் தங்கள் டிக்கெட்டில் உள்ள 5 எண்களையும் பொருத்துவதன் மூலம் 2.25 கோடி ரூபாய்களை வெல்வதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது. மேலும் 5 அதிர்ஷ்ட எண் கொண்ட ரேஃபிள் Drawவில் வெற்றியாளர்கள் ஒவ்வொருவருக்கும் 2.25 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள ரேஃபிள் பரிசுகள் கிடைக்கவுள்ளது.
அதேபோல நாளை, பிப்ரவரி 24 ஆம் தேதி இரவு 09:30 மணிக்கு, சூப்பர் 6 ஆன்லைன் ரேஃபிள் டிரா கேமில் 6 எண்களைப் பொருத்துவதன் மூலம் 225 கோடி ரூபாய் மதிப்பிலான ஜாக்பாட்டை போட்டியாளர்கள் பெற வாய்ப்புகள் உள்ளது. மேலும் 10 அதிர்ஷ்ட ரேஃபிள் வெற்றியாளர்களில் ஒவ்வொருவருக்கும் 2.25 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள ரேஃபிள் பரிசுகள் கிடைக்கவுள்ளது.
வரவிருக்கும் டிராக்கள் குறித்து அறிவித்த Gulf Ticket-ன் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஜோரன் போபோவிக், "பிப்ரவரி 7, 2024 அன்று இந்திய சந்தையில் Gulf Ticketஐ அறிமுகப்படுத்தியதில் இருந்து நாங்கள் பெற்ற உற்சாகம் மற்றும் மக்களின் ஆதரவால் மெய்மறந்து நிற்கிறோம் என்று கூறியுள்ளார். அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பாதுகாப்பான, வெளிப்படையான மற்றும் பொறுப்பான கேமிங் அனுபவத்தை வழங்க Gulf Ticket உறுதிபூண்டுள்ளது''என்றார்.
பொறுப்புத் துறப்பு: இந்திய ரூபாயில் குறிப்பிடப்பட்ட தொகைகள் தோராயமானவை தான். மற்றும் இந்த செய்தி வெளியீட்டின் தேதியின் நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அது இருக்கும். உண்மையான பரிசுத் தொகைகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம்களில் (AED) உள்ளன மற்றும் பரிமாற்றம் மற்றும் வங்கி மாற்று விகிதங்களின்படி அது மாறலாம்.
கூடுதல் விவரங்கள் மற்றும் போட்டிகளில் பங்கேற்க www.gulfticket.com என்ற முகவரியை அணுகவும்.