பிரதமர் மோடி இன்று வாரனாசி பயணம்: ரூ.13,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

Published : Feb 23, 2024, 11:05 AM IST
பிரதமர் மோடி இன்று வாரனாசி பயணம்: ரூ.13,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

சுருக்கம்

பிரதமர் மோடி இன்று உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரனாசி பயணம் மேற்கொள்கிறார். அங்கு ரூ.13,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கவுள்ளார்

பிரதமர் மோடி நேற்று குஜராத் மாநிலம் சென்ற நிலையில், இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். தனது சொந்த தொகுதியான வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்வதந்திர சபாகரில் சன்சத் சமஸ்கிருத பிரதியோகிதா வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

காலை 11:15 மணிக்கு, பிரதமர் துறவி குரு ரவிதாஸ் பிறந்த இடத்தில் பூஜை, தரிசனம் செய்வார். காலை 11:30 மணிக்கு, துறவி குரு ரவிதாஸின் 647-வது பிறந்த நாளை நினைவுகூரும் பொது நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். பிற்பகல் 1:45 மணிக்கு, வாரணாசியில் ரூ.13,000 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டும் பொது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

வாரணாசியில் சாலை இணைப்பை மேலும் மேம்படுத்த, தேசிய நெடுஞ்சாலை எண் 233-ல் கர்க்ரா-பாலம் – வாரணாசி பிரிவை நான்கு வழிப்பாதையாக மாற்றுவது உட்பட பல்வேறு சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். தேசிய நெடுஞ்சாலை எண் 56-ல் சுல்தான்பூர்-வாரணாசி பிரிவை நான்கு வழிப்பாதையாக மாற்றுதல், தொகுப்பு-1; தேசிய நெடுஞ்சாலை 19-ல் வாரணாசி – அவுரங்காபாத் பிரிவின் முதல் கட்டத்தை ஆறு வழிப்பாதையாக மாற்றுதல்; தேசிய நெடுஞ்சாலை 35-ல் தொகுப்பு-1 வாரணாசி-ஹனுமான் பிரிவை நான்கு வழிப்பாதையாக மாற்றுதல்; மற்றும் பபத்பூர் அருகே வாரணாசி – ஜான்பூர் ரயில் பிரிவில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். வாரணாசி – ராஞ்சி – கொல்கத்தா விரைவுச் சாலை தொகுப்பு-1 கட்டுமானத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார்.

இந்தப் பிராந்தியத்தில் தொழில் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், சேவாபுரியில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கழக நிறுவனத்தின் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலையை பிரதமர் தொடங்கி வைக்கிறார். வேளாண் பூங்காவில் பனாஸ் காஷி சங்குல் பால் பதப்படுத்தும் பிரிவு, கர்கியான் உத்தரப்பிரதேச மாநில தொழில் வளர்ச்சி ஆணைய வேளாண் பூங்காவில் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள், பட்டுத் துணி  நெய்தலில் நெசவாளர்களுக்கான பொது வசதி மையம் ஆகியவை இதில் அடங்கும்.

வாரணசாயில் பிரதமர் மோடி : இரவு 11 மணிக்கு ஷிவ்பூர்-புல்வாரியா-லஹர்தாரா சாலையை ஆய்வு செய்த பிரதமர்..

ரமணாவில் என்டிபிசி நிறுவனத்தின் நகர்ப்புற கழிவுகளை கரி ஆலையாக மாற்றுவது உட்பட வாரணாசியில் பல்வேறு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார். சிஸ்-வருணா பகுதியில் நீர் விநியோக அமைப்பை மேம்படுத்துதல்; குளங்களை புனரமைத்தல், பூங்காக்களை மறுசீரமைப்பு செய்தல் உள்ளிட்ட வாரணாசியை அழகுபடுத்துவதற்கான பல்வேறு திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார்.

வாரணாசியில் சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா தொடர்பான பல்வேறு திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார். பத்து ஆன்மீக யாத்திரைகளுடன் பஞ்ச்கோஷி பரிக்கிரமா மார்க் மற்றும் பவன் பாதையின் ஐந்து இடங்களில் பொது வசதிகளை மறுவடிவமைப்பு செய்வது இந்தத் திட்டங்களில் அடங்கும்.

புகழ்பெற்ற வாரணாசியின் ஜவுளித் துறைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், வாரணாசியில் தேசிய ஆடை வடிமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார். இந்தப் புதிய நிறுவனம் ஜவுளித் துறையின் கல்வி, பயிற்சி உள்கட்டமைப்பை வலுப்படுத்தும்.

வாரணாசியில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், வாரணாசியில் புதிய மருத்துவக் கல்லூரிக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் முதியோருக்கான தேசிய மையத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். நகரில் விளையாட்டு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு படியாக சிக்ரா விளையாட்டு அரங்கம் கட்டம் -1 மற்றும் மாவட்ட துப்பாக்கி சுடும் தளத்தை பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தேதி எப்போது.? சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் இன்று முக்கிய ஆலோசனை

பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் ஸ்வதந்த்ரதா சபாகரில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில், காஷி சன்சாத் கியான் பிரதியோகிதா, காஷி சன்சாத் புகைப்படக்கலை பிரதியோகிதா, காஷி சன்சாத் சமஸ்கிருத பிரதியோகிதா ஆகிய விருதுகளை வென்றவர்களுக்கு பிரதமர் விருதுகளை வழங்குவார். வாரணாசியில் சமஸ்கிருத மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள், இசைக்கருவிகள், கல்வி உதவித்தொகைகளையும் அவர் வழங்குவார். காசி சன்சாத் புகைப்படக் கலை பிரதியோகிதா காட்சியகத்தைப் பார்வையிடும் பிரதமர், "காசியை சீரமைத்தல்" என்ற கருப்பொருளில் பங்கேற்பாளர்களுடன் புகைப்படக் குறிப்புகளுடன் கலந்துரையாடுகிறார்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் அருகே சீர் கோவர்தன்புரில் உள்ள துறவி குரு ரவிதாஸ் பிறந்த இடத்தில், அருகே உள்ள ரவிதாஸ் பூங்காவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள துறவி ரவிதாஸ் சிலையை பிரதமர் திறந்து வைப்பார். சுமார் ரூ.32 கோடி மதிப்பிலான துறவி ரவிதாஸ் பிறந்த இடத்தைச் சுற்றி பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைக்கும் அவர், துறவி ரவிதாஸ் அருங்காட்சியகம், சுமார் ரூ.62 கோடி மதிப்பில் பூங்காவை அழகுபடுத்துதல் ஆகியவற்றுக்கும்  அடிக்கல் நாட்டவுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!