மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை 3 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 86.
கடந்த ஆண்டு மே மாதம் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதில் இருந்து ஜோஷியின் உடல்நிலை மோசமாகி வந்தது. இதை தொடர்ந்து ஹிந்துஜா மருத்துவமனையில் உள்ள ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஓரிரு நாட்கள் அரை மயக்க நிலையில் இருந்தார். எனினும் அவர் குணமடையததால் தனது வீட்டிலேயே மருத்துவ கண்காணிப்பில் இருந்தார்.
நெஞ்சு வலி காரணமாக மும்பையின் பிடி இந்துஜா மருத்துவமனையின் ஐசியுவில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்ட அவர், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் குடும்பத்தினரும் இந்த தகவலை உறுதி செய்தனர். அவரது இறுதிச் சடங்குகளை சிவாஜி பார்க் சுடுகாட்டில் பிற்பகல் 3 மணிக்கு நடத்த உள்ளதாகவும், அவரின் உடல் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
undefined
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தேதி எப்போது.? சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் இன்று முக்கிய ஆலோசனை
மனோகர் ஜோஷியின் மகன் உன்மேஷ இதுகுறித்து பேசிய போது, “என் தந்தை ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் இருந்தார். அவருக்கு புதன்கிழமை இருதய கோளாறு ஏற்பட்டது. அவருக்கு நீண்ட காலமாக வயது தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன. நாங்கள் சிவாஜி பார்க் மயானத்தில் இறுதிச் சடங்குகள் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
1937-ம் ஆண்டு , மகாராஷ்டிராவின் மஹாத்தில் பிறந்த ஜோஷி, மும்பையில் உள்ள மதிப்புமிக்க வீர்மாதா ஜிஜாபாய் தொழில்நுட்ப நிறுவனத்தில் (VJTI) சிவில் இன்ஜினியரிங் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஜோஷியின் அரசியல் வாழ்க்கை (ஆர்எஸ்எஸ்) ஈடுபாட்டுடன் தொடங்கியது, பின்னர் சிவசேனாவில் உறுப்பினரானார். 1980 களில், ஜோஷி சிவசேனாவிற்குள் ஒரு முக்கிய தலைவராக உருவெடுத்தார், அவருடைய நிறுவனத் திறன்கள் மற்றும் அடிமட்ட தொடர்புகளுக்கு பெயர் பெற்றவர். 1995 இல் அவர் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டது அவரின் அரசியல் வாழ்க்கையின் முக்கிய மைக்ல்கல்லாக பார்க்கப்பட்டது..
ஜோஷி 1995 முதல் 1999 வரை முதலமைச்சராக பணியாற்றினார். ஒன்றிணைந்த சிவசேனாவில் இருந்து மாநிலத்தின் உயர் பதவியை வகித்த முதல் தலைவர் ஆவார். நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், வாஜ்பாய் அரசு இருந்தபோது 2002 முதல் 2004 வரை மக்களவை சபாநாயகராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.