அம்பானி திருமணத்தில் அத்துமீறி நுழைந்த இளைஞர்கள்! யார் அவர்கள்? என்ன கதி ஆனாங்க தெரியுமா!

By SG Balan  |  First Published Jul 16, 2024, 5:40 PM IST

அழையா விருந்தாளிகளாக வந்தவர்களில் ஒருவர் வெங்கடேஷ் நரசையா என்ற யூடியூபர் என்றும் மற்றொருவர் தொழிலதிபர் லுக்மான் முகமது ஷஃபி ஷேக் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.


ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு அழைப்பிதழ் இல்லாமல் நுழைந்த ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் குழும தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன்  ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் ஜூலை 12ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் பாலிவுட், டோலிவுட், திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Tap to resize

Latest Videos

undefined

அழைப்பிதழ் அனுப்பப்பட்ட முக்கியப் பிரமுகர்கள் மட்டுமே திருமண நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். அந்நியர்கள் திருமணம் நடக்கும் வளாகத்திற்குள் நுழைவதைத் தடுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால் அதை மீறி இரண்டு பேர் உள்ளே நுழைந்துவிட்டனர்.

அழையா விருந்தாளிகளாக வந்தவர்களில் ஒருவர் 26 வயதான வெங்கடேஷ் நரசையா அல்லூரி என்ற யூடியூபர் என்றும் தெரியவந்துள்ளது. மற்றொருவர் தன்னை ஒரு தொழிலதிபர் என்று கூறிக்கொண்டார். 28 வயதான அவரது பெயர் லுக்மான் முகமது ஷஃபி ஷேக் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இருவரையும் மும்பையின் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரண்டு வழக்குகளிலும் நோட்டீஸ் கொடுத்து சட்ட நடவடிக்கை எடுத்த பின், குற்றவாளிகளை போலீசார் விடுவித்துள்ளனர்.

click me!