
பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனங்களை கவனக்குறைவாக தவறான பாதையில் அழைத்து சென்ற இரண்டு போலீஸார் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பங்கேற்க பிரதமர் மோடி சென்றிருந்தார்.
நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் பொட்டானிக்கல் கார்டனில் உள்ள ஹெலிபேடுக்கு பிரதமர் திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது.
திட்டமிட்ட பாதையில் பிரதமரின் அணிவரிசையை அழைத்துச் செல்லும் வாகனத்தை உதவி ஆய்வாளர் திலீப் சிங், காவலர் ஜெய்பால் ஆகியோர் வழிநடத்தினர்.
பிரதமரின் பாதுகாப்பு அணிவரிசை சரியாக சென்று கொண்டிருந்த போது, குறிப்பிட்ட ஒரு இடத்தில் தவறான திருப்பத்தில் மற்ற காவலர்களின் வாகனங்கள் திரும்பின.
இதைபார்த்து பிரதமரின் பாதுகாப்பு அணிவரிசை வாகனங்கள் அனைத்தும் திரும்பியதால் அணிவரிசை நொய்டா விரைவுச் சாலையின் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டது.
நெரிசலிலேயே சென்று பின் சிறிது நேர தாமதத்திற்கு பின் சரியான பாதைக்கு திரும்ப நேர்ந்தது. இதனால் பிரதமரின் பயணத்தில் 10 நிமிடம் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்புக் குறைபாட்டை ஏற்படுத்தியதாக கூறி இரண்டு போலீசாரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.