ஃபேஸ்புக் கணக்கு தொடங்கணுமா ? கண்டிப்பா இனி ஆதார் அவசியம்!

 
Published : Dec 28, 2017, 06:04 AM ISTUpdated : Sep 19, 2018, 01:44 AM IST
ஃபேஸ்புக் கணக்கு தொடங்கணுமா ? கண்டிப்பா இனி ஆதார் அவசியம்!

சுருக்கம்

Start a Facebook account? Adhar card must now!

ஃபேஸ்புக் கணக்கு தொடங்க வேண்டும் என்றால் இனிமேல் கண்டிப்பாக ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என்று ஃபேஸ்புக் நிறுவனத்தில் இந்திய பிரிவு தெரிவித்துள்ளது. இது வரை இதுபோன்ற கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் ஃபேஸ்புக் தொடங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த புதிய கடுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 217 மில்லியன் நபர்கள் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் 212 மில்லியன் நபர்கள் ஸ்மார்ட்ஃபோன்களில் ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வருகிறார்கள்.

இதுவே உலகளவில் 2.1 பில்லியன் நபர்கள் ஒவ்வொரு மாதமும் ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களாக உள்ளனர்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு தொடங்க, பான் கார்டு வாங்க, பாஸ்போர்ட் பெற, அரசின் நலத்திட்டங்களை பெற்றுக்கொள்ள என அனைத்துக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஃபேஸ்புக் கணக்கு தொடங்கவும் ஆதார் எண் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்திய பிரிவு செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஃபேஸ்புக்கில் இனி வரும் காலங்களில் புதிய கணக்கு துவங்க ஆதார் தேவை. அதில் ஆதாரில் உள்ள பெயரை குறிப்பிட்டு இந்த புதிய கணக்கை துவங்கலாம். ஆனால் ஆதார் எண் அளிக்கப்பட வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது..

இதன்மூலம் அவர்களுக்கு ஃபேஸ்புக்கில் தேவையானதை உடனடியாக ஆய்வு செய்து அளிக்க முடியும். குறிப்பாக அவரது மொழியில் இந்த இயங்குதளம் செயல்படும். மேலும், அவரை தன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எளிதில் அடையாளம் காண முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.. 

இந்த நடைமுறை கட்டாயமல்லை என்றாலும் இதனை ஒரு பரிசோதனை முயற்சியாகவே செய்துவருவதாகவும்,  இதனால்  அனைவரும் தங்களின் சொந்த பெயருடன் கணக்கை துவக்கும் வசதி ஏற்படும் என்றும் ஃபேஸ்புக்  நிறுவனம் தெரிவித்துள்ளது.   

PREV
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!