ரயிலில் சக்கரத்தில் நசுங்கி 2 சிறுவர்கள் சாவு! மொபைல் கேம் மோகத்தால் நேர்ந்த விபரீதம்!

By SG Balan  |  First Published Sep 1, 2024, 8:57 PM IST

டல்லி ராஜ்ஹாரா-துர்க் உள்ளூர் ரயிலில் இருந்து வரும் ஹாரன் சத்தம்கூட கேட்காத அளவுக்கு இருவரும் தங்கள் மொபைல் போன்களில் மூழ்கி இருந்ததாகக் கூறப்படுகிறது.


சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுவர்கள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவர்கள் இருவரும் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் பத்மநாப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரிசாலி பகுதியில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது என ஞாயிற்றுக்கிழமை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

பலியானவர்கள் இருவரும் புரான் சாஹு மற்றும் வீர் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் 14 வயதானவர்கள் என்றும் லாய் நகரில் உள்ள ரிசாலி செக்டார் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

கத்துக்கிட்ட எல்லாமே போச்சு! ஞாபக மறதியால் அவதிப்படும் நடிகை பானுப்ரியா!

டல்லி ராஜ்ஹாரா-துர்க் உள்ளூர் ரயிலில் இருந்து வரும் ஹாரன் சத்தம்கூட கேட்காத அளவுக்கு இருவரும் தங்கள் மொபைல் போன்களில் மூழ்கி இருந்ததாகக் கூறப்படுகிறது.

ரயில் மோதியதில் சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுவர்களின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!