ஜம்முவில் லஷ்கர் இ தொய்பா படைத்தளபதி என்கவுன்டர்.. பிரதமர் மோடி வருகைக்கு முன்பு அதிர்ச்சி சம்பவம் !!

By Raghupati RFirst Published Apr 22, 2022, 8:48 AM IST
Highlights

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பாரிஸ்வானி பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்றது. 

இதில், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து காஷ்மீர் ஐஜிபி விஜய் குமார் பேசிய போது, ‘பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். என்கவுன்டர் நடவடிக்கை இன்னும் நடந்து வருகிறது. அங்கு மேலும் மூன்று பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கக் கூடும். 

இந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் மற்றும் ஒருவர் உள்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்ட இரண்டு பயங்கரவாதிகளில் ஒருவர் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் உயர்மட்ட தளபதி யூசுப் கான்ட் ஆகும். சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் உள்பட சட்டவிரோத பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’ என்று கூறினார்.

இதையடுத்து அப்பகுதி முழுவதையும் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து, பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 24-ம் தேதி பஞ்சாயத்து ராஜ் தினத்தன்று பிரதமர் மோடி ஜம்முவில் உள்ள பள்ளி கிராமத்திற்கு செல்கிறார். பிரதமர் வரக்கூடிய சூழ்நிலையில், நடைபெற்றுள்ள இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மேலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : TN Corona : தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா.. உஷார் மக்களே ! முகக்கவசம் அவசியம்.!!

click me!