திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக வெற்றிபெற்றுள்ள நிலையில் மேகாலயாவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் தலா 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த நிலையில் திரிபுராவில் கடந்த பிப்.16 ஆம் தேதியும் மேகாலயா நாகாலாந்து மாநிலங்களில் கடந்த பிப்.27 ஆம் தேதியும் வாக்கு பதிவு நடைபெற்றது. மூன்று மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. பின்னர் கட்சிகளின் முன்னிலை நிலவரமும் தொடர்ந்து வெளியாகி வந்தது. இந்த நிலையில் மூன்று மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக வெற்றிபெற்றுள்ள நிலையில் மேகாலயாவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது.

10:34 PM (IST) Mar 02
திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக வெற்றிபெற்றுள்ள நிலையில் மேகாலயாவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் தலா 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த நிலையில் திரிபுராவில் கடந்த பிப்.16 ஆம் தேதியும் மேகாலயா நாகாலாந்து மாநிலங்களில் கடந்த பிப்.27 ஆம் தேதியும் வாக்கு பதிவு நடைபெற்றது. மூன்று மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. பின்னர் கட்சிகளின் முன்னிலை நிலவரமும் தொடர்ந்து வெளியாகி வந்தது. இந்த நிலையில் மூன்று மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.
04:25 PM (IST) Mar 02
நாகாலாந்தில் நடந்த சட்டப்பேரைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. நாகாலாந்து மக்களால் துடைத்தெறியப்பட்டது காங்கிரஸ் கட்சி. விரிவான செய்திகளுக்கு ...
03:57 PM (IST) Mar 02
திரிபுராவில் பாஜக தனித்தும், நாகாலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியுடன் (என்டிபிபி) தனித்தும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் நிலையில், இன்று பாஜக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெறும் கட்சியின் மூத்த தலைவர்களின் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன
03:55 PM (IST) Mar 02
03:39 PM (IST) Mar 02
மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தொங்கு சட்டசபை அமையும் நிலை ஏற்பட்டுள்ளது விரிவான செய்திகளுக்கு...
02:01 PM (IST) Mar 02
நாகாலாந்து மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், மாநில வரலாற்றில் முதல்முறையாக, பெண் எம்எல்ஏ-வாக ஹெக்கானி ஜக்காலு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விரிவான செய்திகளுக்கு..
01:30 PM (IST) Mar 02
திரிபுராவில் ஆளும் பாஜக ஆட்சியைத் தக்கவைக்கிறது என்று தேர்தல் முடிவுகள் வாயிலாக தெரியவருகிறது. அதேநேரம், புதிதாக களம்கண்ட திப்ரா மோத்தா கட்சிக்கும் பாஜக வலைவீசத் தொடங்கியுள்ளது. விரிவான செய்திகளுக்கு..........
12:26 PM (IST) Mar 02
12:18 PM (IST) Mar 02
12:09 PM (IST) Mar 02
11:59 AM (IST) Mar 02
11:50 AM (IST) Mar 02
Nagaland Election Results 2023:
11:37 AM (IST) Mar 02
Tripura Assembly Election Result 2023 :
11:22 AM (IST) Mar 02
Meghalaya Assembly election result 2023
11:15 AM (IST) Mar 02
11:05 AM (IST) Mar 02
Meghalaya Assembly election result 2023:
10:58 AM (IST) Mar 02
10:49 AM (IST) Mar 02
10:33 AM (IST) Mar 02
10:29 AM (IST) Mar 02
10:22 AM (IST) Mar 02
Tripura Assembly Election Result 2023:
10:14 AM (IST) Mar 02
10:03 AM (IST) Mar 02
09:58 AM (IST) Mar 02
09:48 AM (IST) Mar 02
மேகாலயாவில் திக்ரிகில்லா சட்டசபை தொகுதியில் என்பிபிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. என்பிபி வேட்பாளர் ஜிம்மி சங்மா 140 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளரான ரஹிநாத் பர்சுங், என்பிபி வேட்பாளருக்கு கடும் போட்டியை அளித்து வருகிறார். பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான முகுல் சங்கமா மூன்றாவது இடத்தில் உள்ளார்.
09:45 AM (IST) Mar 02
09:44 AM (IST) Mar 02
நாகாலாந்தில் பாஜக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற உள்ளது, பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியிருப்பதால், துவக்க நிலை முடிவுகள் வெளியாகி வருகிறது. இதன்படி, பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சியான தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியும் (NDPP) மொத்தமுள்ள 60 இடங்களில் 49 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. ஆட்சி அமைக்க 31 வெற்றி பெற்று இருந்தால் போதும்.
09:40 AM (IST) Mar 02
திரிபுரா தேர்தலில் பாஜக கூட்டணி வலிமையான முன்னிலை பெற்றுவரும் சூழலில் முதல்வர் மாணிக் சாஹா மாதா திரிபுர சுந்தரி ஆலயத்தில் வழிபாடு.
09:37 AM (IST) Mar 02
09:31 AM (IST) Mar 02
மேகாலயாவின் கார்குட்டா தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் சேரக் வாட்ரே மோமின் முன்னிலை வகிக்கிறார். என்பிபி வேட்பாளர் ரூபர்ட் மோமின் 279 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.
09:28 AM (IST) Mar 02
09:24 AM (IST) Mar 02
09:19 AM (IST) Mar 02
Meghalaya Election Results 2023: திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் ராஜேஷ் மராக் ரொங்காரா சிஜு சட்டமன்றத் தொகுதியில் 155 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். என்பிபி வேட்பாளர் ரக்கம் ஏ சங்மா பின்தங்கியுள்ளார்.
09:17 AM (IST) Mar 02
09:13 AM (IST) Mar 02
Meghalaya Election Results 2023: மேகாலயா சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் இதுவரை என்பிபி கட்சி 21இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும், மற்றவர்கள் 8 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றனர். என்பிபி கட்சி இங்கு ஆளும் கட்சியாக இருக்கிறது. மீண்டும் கூட்டணியில் ஆட்சி அமைப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
09:08 AM (IST) Mar 02
நாகாலாந்தில் நடந்த 60 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. நாகாலாந்தில் ஒரு காலத்தில் ஆட்சி அமைத்திருந்த காங்கிரஸ் கட்சி இப்போது மக்களால் துடைத்து எறியப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
நாகாலாந்தில் கடந்த 1993 முதல் 2003 வரை 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி கடந்த 20 ஆண்டுகளாக அடையாளம் தெரியாத அளவுக்கு நசுங்கி வருகிறது. இந்தத் தேர்தலில் வெறும் ஒரு இடத்தில் மட்டுமே காங்கிரஸ் முன்னிலை பெற்றுவருகிறது. இந்த முன்னிலையும் சாத்தியமில்லாதபட்சத்தில் மக்களால் காங்கிரஸ் கட்சி துடைத்தெறியப்படும்
09:05 AM (IST) Mar 02
Nagaland Election Results 2023: நாகாலாந்து மாநிலத்தில் என்டிபிபி கட்சி 30 இடங்களிலும், பாஜக 12 இடங்களிலும், என்பிஎப் 2 இடங்களிலும், மற்றவர்கள் 4 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றனர்.
09:03 AM (IST) Mar 02
09:02 AM (IST) Mar 02
டவுன் போர்டோவாலி தொகுதியில் திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா முன்னிலை வகிக்கிறார்
08:59 AM (IST) Mar 02
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, திரிபுராவின் அகர்தலாவில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியினர் பூஜை செய்தனர். அப்போது திரிபுராவில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று மாநில பாஜக தலைவர் ராஜீப் பட்டாச்சார்ஜி நம்பிக்கை தெரிவித்தார்.