பாஜக ஆளும் திரிபுரா மாநில முதல்வர் ராஜினாமா.. அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ராஜினாமா..

By Thanalakshmi VFirst Published May 14, 2022, 5:01 PM IST
Highlights

பாஜக ஆளும் மாநிலமான திரிபுரா மாநில முதல்வர் விப்லவ்குமார் தேவ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

பாஜக ஆளும் மாநிலமான திரிபுரா மாநில முதல்வர் விப்லவ்குமார் தேவ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: wheat export ban: கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அ ரசு திடீர் தடை: காரணம் இதுதான்

திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் எஸ்.என்.ஆர்யாவிடம் சமர்ப்பித்தார். மேலும் அவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம், அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்காக அமைப்பை வலுப்படுத்த பணியாற்ற வேண்டும் என்று கட்சி விரும்புகிறது என்று தெரிவித்தார். 

ஆனால், சர்ச்சை பேச்சு, சர்ச்சைக்குரிய முடிவுகள் என விப்லவ்குமார் தேவ் மீது சட்டமன்ற உறுப்பினர் பலர் அதிருப்தி இருந்ததாகவும் அதனால் அவர் மேலிடத்தின உத்தரவின் பேரில் பதவி விலகியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கட்ட்சியில் மாநிலப் பிரிவுக்குள் ஏற்பட்ட பூசல் காரணமாக அவர் ராஜினாமா செய்துள்ளாதாக கூறப்படுகிறது. 

இதனைதொடர்ந்து பாஜகவின் எம்.எல்.ஏக்கள் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பார்கள் எனவும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் இன்று இரவு 8 மணிக்கு கூடுகிறது எனவும் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: பரபரப்பு.. மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து.. டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் தீ விபத்து என தகவல்..

click me!